மக்கள் தற்கொலையில் சாகடிக்கப்படுகிறார்கள் – தீபிகா படுகோன்

0
290

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நேற்று மும்பையில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி பரவியதும் திரையுலகில் அதிர்ச்சி எதிரொலித்தது. சுஷாந்த்தின் மரணத்துக்கு என்ன காரணம் என்பது குறித்து மும்பை காவல்துறை விசாரித்து வருகிறது. டி.வி மற்றும் இனையதளங்களில் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டதாக தொடர்ச்சி யாக கூறப்பட்டு வருகிறது.

இதற்கு நடிகை தீபிகா படுகோனே கண்டனம் தெரிவிக்கும் வகையில் தனது டிவிட்டர் பக்கத்தில் 


’ அருமை மீடியா நண்பர்களே,
கிரிமினல்கள் ’குற்றம்’ செய்கிறார்கள்
மக்கள் தற்கொலை செய்வதில்லை

அவர்கள் தற்கொலையில் சாகடிக்கப்படுகிறார்கள்.
அவர்களது அந்த நடவடிக்கை ஆழ்ந்த வேதனையின் வெளிப்பாடாகும்

நன்றி என்று பதிவிட்டிருக்கிறார். 

 தீபிகா படுகோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், ”மனநலப் பிரச்சினையுடன் அனுபவப்பட்ட ஒரு பெண்ணாக, தொடர்பு கொள்வதன் முக்கியத்துவத்தைப் பற்றி என்னால் இதற்கு மேல் வலியுறுத்த முடியாது. பேசுங்கள், தொடர்பு கொள்ளுங்கள், உணர்வுகளை வெளிப்படுத்துங்கள், உதவி கேளுங்கள். நினைவிருக்கட்டும், நீங்கள் தனி நபர் அல்ல. நாம் இதில் ஒன்றுபட்டே இருக்கிறோம். மிகவும் முக்கியமாக, ஏதோ ஒரு வழி பிறக்கும்” என்று தீபிகா கூறியுள்ளார்.

View this post on Instagram

🤝 #youarenotalone

A post shared by Deepika Padukone (@deepikapadukone) on

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here