’மக்கள் இதில் தெளிவாக இருக்கிறார்கள்’

0
216

எந்தவிதமான அத்துமீறல், அக்கிரமம் நடந்தாலும் அதிமுக ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்பதில் பொதுமக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் கூறினார்.

சென்னை ஆர்கே நகர் சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையின்போது, நடிகர் விஷால் தாக்கல் செய்த வேட்பு மனுவினை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. இதற்கு ஆளுங்கட்சியினரின் மிரட்டல்தால் காரணம் என விஷால் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் இது குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளார்களிடம் பேசிய ஸ்டாலின், ”ஆளுங்கட்சியினரின் அத்துமீறல்கள் குறித்து தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இதிலிருந்து தெரியவருகிறது. ரிட்டர்னிங் அதிகாரியை பொறுத்தவரையில் ஆளுங்கட்சியினர் சொல்வதை மட்டும்தான் செய்வார் என்பது இதன்மூலம் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. எனவே, தேர்தல் அதிகாரியை மாற்ற, தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எனது கருத்து.” என்றார். மேலும், திமுக கோரியபடி வாக்காளர் பட்டியலில் இருந்த போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் கூறினாலும், இன்னும் 5,000 போலி வாக்களர்களை நீக்கவில்லை.என்றார். நேர்மையாக தேர்தல் நடக்க வேண்டும் என்பதுதான் எல்லோருடைய விருப்பம் என்றும், எந்தவிதமான அத்துமீறல், அக்கிரமம் நடந்தாலும் ‘ குதிரை பேர’ ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்பதில் பொதுமக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்: கூகுளை நடத்துவதும் மீன் கடை நடத்துவதும் ஒன்றா?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்