“மக்கள் இடையேயான தொடர்பை காங்கிரஸ் கட்சியினர் இழந்துவிட்டார்கள்” : மூத்த காங். தலைவர்

“Congress is at its lowest in 72 years. Congress does not have even the post of Leader of Opposition in Lok Sabha during the last two terms. But Congress won 9 seats in Ladakh hill council elections even as we were not expecting such a positive result,” Azad said.

0
435

காங்கிரஸ் கட்சியினர் 5 ஸ்டார் கலாசாரத்தை கைவிட வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “தோல்விகள் குறித்து நாங்கள் வருந்துகிறோம். குறிப்பாக பீகார் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் முடிவுகள் பற்றி நாங்கள் வருந்துகிறோம். தலைமையை குறை கூற விரும்பவில்லை. மக்கள் இடையேயான தொடர்பை காங்கிரஸ் கட்சியினர் இழந்துவிட்டார்கள். ஒருவர் தனது கட்சியை நேசிக்க வேண்டும். கட்சியில் வாய்ப்பு கிடைத்தால் உடனே 5 ஸ்டார் ஹோட்டலைத்தான் பதிவு செய்கிறார்கள்.

கடினமான சாலை இருந்தால் அவர்கள் செல்லமாட்டார்கள். 5 ஸ்டார் கலாச்சாரம் கைவிடும் வரை, தேர்தலில் வெற்றி பெற முடியாது. கடந்த 2 முறையாக மக்களவையில் காங்கிரஸுக்கு எதிர்கட்சி தலைவர் அந்தஸ்து கிடைக்கவில்லை” எனத் தெரிவித்தார்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here