நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போது தொடர் அமளி காரணமாக அவை அலுவல் நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் மக்களின் வரிப்பணம் 198 கோடி ரூபாய் வீணாகியுள்ளது.

1. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், கடந்த ஜன.29ஆம் தேதி முதல் பிப்.9ஆம் தேதி வரையிலும், அதன் பின்னர் இரண்டாவது அமர்வு மார்ச்.5ஆம் தேதி முதல் ஏப்.6ஆம் தேதி வரை நடைபெற்றது.

2. இந்தக் கூட்டத்தொடரில் பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து, ரஃபேல் விமானம் ஒப்பந்தம், காவிரி மேலாண்மை வாரியம் போன்ற விவகாரங்களால் மாநிலங்களவை மற்றும் மக்களவைத் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது. இதனால் அவை நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை. இதன் காரணமாக மக்களின் வரிப்பணம் 198 கோடி ரூபாய் வீணாகியுள்ளது.

3. நாடாளுமன்ற அவை அலுவல் நடவடிக்கைகளுக்கு ஒட்டுமொத்தமாக ஒரு நிமிடத்திற்கு இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவு செய்யப்படுவதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதனடிப்படையில், 2018ஆம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் உறுப்பினர்களின் அமளி காரணமாக 127 மணி நேரம் 45 நிமிடம் வரை வீணடிக்கப்பட்டுள்ளது.

4. பட்ஜெட் கூட்டத்தொடரின்போது மக்களவை உறுப்பினர்களில் 150 பேர் மட்டுமே வருகைப் பதிவேட்டில் தினமும் கையெழுத்திட்டுள்ளனர்.

5. பட்ஜெட் கூட்டத் தொடரில், நிதி மசோதா உள்ளிட்ட ஐந்து மசோதாக்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் மக்களவையில் எழுப்பப்பட்ட 580 கேள்விகளில் 17இல் மட்டுமே பதிலளிக்கப்பட்டுள்ளது.

நன்றி: indiaspend.com

இதையும் படியுங்கள்: நிர்மலாதேவி விவகாரம்: ‘சிபிசிஐடி கூடுதல் டிஜிபியை மாற்றியதன் பின்னணி இதுதான்’

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்