கொளத்தூர் தொகுதியில் மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதைத் தவிர்க்கும் விதத்தில் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணியை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.

அப்போது “சேலம் -சென்னை பசுமை வழிச் சாலைத் திட்டத்தை மக்களின் கருத்தைக் கேட்டறிந்த, பின்னரே செயல்படுத்த வேண்டும்” என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

மேலும் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் வகிப்பதாக வந்துள்ள ஆய்வறிக்கை பற்றி கேள்வி எழுப்புகிறீர்கள். பெண்களின் பாதுகாப்பு இன்றைக்கு எந்த நிலையில் இருக்கிறது என்பதை ஆதாரங்களோடும், புள்ளி விவரங்களோடும் தெளிவாக சட்டப்பேரவையில் சொல்லியிருக்கிறேன். ஆனால், அதற்கு பதிலுரை ஆற்றிய முதல்வர், அனைத்தையும் மூடி மறைக்கும் வகையில் இந்தக் குற்றங்கள் எல்லாம் குறைந்திருக்கிறது என்று கூறினாரே தவிர அதற்குரிய நடவடிக்கைகள் என்ன எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை அவரால் சொல்ல முடியவில்லை. மிகப்பெரிய பொருளாதாரம் தரக்கூடிய ஒரு தொழிற்சாலையை முடக்குவது என்பது பொருளாதார தற்கொலை என்று ஜக்கி வாசுதேவ் கூறியிருப்பது பற்றி கேள்வி எழுப்புகிறீர்கள். தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் ஒரு கருத்தைச் சொல்லலாம். ஆனால், பாதிக்கப்படுவது மக்கள்தான். அதனால், மக்களுடைய கருத்துகளைக் கேட்ட பிறகுதான் எந்தப் பணிகளாக இருந்தாலும் நடைமுறைப்படுத்த வேண்டும். ரூ.10,000 கோடி மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்டிருக்கும் சேலம் – சென்னை பசுமை வழிச்சாலைத் திட்டத்தையும் மக்களின் கருத்தைக் கேட்டறிந்த பிறகுதான் செயல்படுத்த வேண்டும் என்றார்.

[vc_video title=”இதையும் பாருங்கள்” link=”https://www.youtube.com/watch?v=iIKIfXxc81U&t=13s”]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here