மக்களவை தேர்தலில் காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்கள் என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மிக்கும் காங்கிரசுக்கும் இடையே கூட்டணி ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் பேசியுள்ளார்.

கக்ரோலா நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று கெஜ்ரிவால் பேசியதாவது-

காங்கிரஸ் கட்சிக்கு எக்காரணத்தை கொண்டும் வாக்களித்து விடாதீர்கள். அப்படி செய்தால் அது மோடியை வலுப்படுத்துவது போன்று ஆகி விடும். உங்கள் வாக்குகள் சிதற வேண்டாம்.

டெல்லியில் இருந்து தேர்வு செய்யப்படும் அனைத்து எம்.பி.க்களையும் ஆம் ஆத்மி கட்சியில் இருந்தே தேர்வு செய்யுங்கள்.

இவ்வாறு கெஜ்ரிவால் பேசினார். மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரசும் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கெஜ்ரிவாலின் பேச்சு கூட்டணியை முறிக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

ஆம் ஆத்மி தலைவர்கள் பேசி வருவதை பார்க்கும் போது அக்கட்சி மக்களவை தேர்தலில் தனித்தே போட்டியிடும் என கருதப்படுகிறது.

டெல்லி, ஹரியானா, கோவா மற்றும் சண்டிகர் ஆகிய மாநிலங்களில் உள்ள 33 தொகுதிகளில் ஆம் ஆத்மி போட்டியிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here