மக்களவைத் தேர்தல் 2019: தமிழகத்தில் 37 தொகுதிகளில் திமுக முன்னிலை

0
223


தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. ஏப்ரல் 18 ஆம் தேதி 18 தொகுதிக்கும், மே 19 ஆம் தேதி 4 தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்தது. 

மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி, இடைத்தேர்லில் திமுக கூட்டணி 12 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 10 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

மக்களவைத் தேர்தலில் 38 தொகுதிகளில் 37 தொகுதிகளில் திமுக முன்னிலை வகித்து வருகிறது. 

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் மாணிக்க தாகூர் 14,693 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். 

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் முதல் சுற்றில் 21967 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். 

பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தர்  முன்னிலை வகித்து வருகிறார். 

நாமக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் சின்ராஜ் முன்னிலை வகித்து வருகிறார். 

கன்னியாகுமாரியில் காங்கிரஸ் வேட்பாளர் எச். வசந்தகுமார் முன்னிலை வகித்து வருகிறார்.

ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் முன்னிலை வகித்து வருகிறார். 

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி  முன்னிலை வகித்து வருகிறார். 

கள்ளக்குறிச்சியில் திமுக வேட்பாளர் பொன். கவுதம் சிகாமணி முன்னிலை வகித்து வருகிறார். 

புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம்  முன்னிலை யில் இருந்து வருகிறார்.

திருச்சி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர்  முன்னிலை வகித்து வருகிறார்.

அரக்கோணம் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் முன்னிலையில் இருந்து வருகிறார். 

சேலம் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் எஸ். ஆர். பார்த்திபன் முன்னிலை பெற்று வருகிறார். 

கரூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி முன்னிலையில் இருக்கிறார்  

திருவாரூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் முன்னிலை வகித்து வருகிறார். 

கடலூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் ரமேஷ்  முன்னிலை வகித்து வருகிறார். 

திண்டுக்கல் தொகுதியில் திமுக வேட்பாளர் முன்னிலை வகித்து வருகிறார்.

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜி.செல்வம் முன்னிலை வகித்து வருகிறார். 

ராமநாதபுரம் தொகுதியில்  திமுக கூட்டணியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் முன்னிலை வகித்து வருகிறார். 

கோவை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் நடராஜன்  முன்னிலை பெற்று வருகிறார். 

மத்திய சென்னையில் முதல் சுற்றில் திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் முன்னிலை வகித்து வருகிறார்.

தென்காசி தொகுதியில் திமுக வேட்பாளர் தனுஷ் எம் குமார்  முன்னிலை வகித்து வருகிறார்.

வடசென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி  முன்னிலை வகித்து வருகிறார்.

தஞ்சாவூர் தொகுதியில் திமுக வேட்பாளர் பழனிமாணிக்கம் முன்னிலை வகித்து வருகிறார்.

நாகப்பட்டினம் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட சிபிஐ வேட்பாளர் செல்வராஜ் முன்னிலை வகித்து வருகிறார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here