கூற்று: 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நாட்டிலுள்ள 6,00,000 கிராமங்களுக்கும் அதிவேக பிராட்பாண்ட் இணையதள சேவை வழங்கப்படும்.

மேற்கண்ட கூற்றை மத்திய தொலைத்தொடர்பு துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) மனோஜ் சின்ஹா கூறியிருந்தார்.

தீர்ப்பு: மத்திய அரசின் மேற்கண்ட திட்டம் இந்தியாவின் ஊரக பகுதிகளில் மின்னணு சார்ந்த அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தியிருந்தாலும், அதன் இலக்கை அடையவில்லை என்பதே உண்மை.

இந்திய பிரதமர் நரேந்திர மோதி, 100 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்களை இணையதளம் மூலம் இணைக்க விரும்புகிறார். இதற்காக மலிவான விலையுள்ள இணையதள சேவையை மக்களுக்கு வழங்குவதற்குரிய திட்டத்தை அவரது தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

பாரத்நெட் என்னும் சிறப்பு திட்டத்தின் மூலம் குறைந்தபட்சம் 100 எம்பிபிஎஸ் இணைய வேகத்தை நாட்டிலுள்ள 6 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு கொண்டுசெல்வதற்குரிய திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நரேந்திர மோதியின் கனவுத் திட்டமான, ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தின் ஒரு பகுதியாக, ஆப்டிகல் பைபர் தொழில்நுட்பம் மூலமாக அதிவேக இணையதள சேவையை உறுதிசெய்யும் இந்த திட்டம் 2014ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த திட்டம் தொடங்கப்பட்டு நான்காண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை 50 சதவீத இலக்கே எட்டப்பட்டுள்ளது.

உலகிலேயே இணையத்தை அதிகம் பயன்படுத்துபவர்கள் உள்ள பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருந்தாலும், அதன் மிகப் பெரிய மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது, இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மிகவும் குறைவாகவே உள்ளது.

2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாத நிலவரப்படி, இந்தியாவில் 56 கோடி இணையதள பயன்பாட்டாளர்கள் உள்ளதாக இந்திய தொலைத்தொடர்புத்துறை ஆணையம் தெரிவித்துள்ளது.

பெரும்பாலானவர்கள் பிராட்பாண்ட் மூலம் இணைய சேவைகளை பெற்றாலும், தங்களது அலைபேசிகள் வழியாகவே அதிகளவு இணையதளத்தை பயன்படுத்துகின்றனர்.

இந்தியாவின் பிராட்பாண்ட் பயன்பாட்டாளர்கள்

Courtesy : BBC

லட்சிய திட்டம்

உலகிலேயே இணையத்தை அதிகம் பயன்படுத்துபவர்கள் உள்ள பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருந்தாலும், அதன் மிகப் பெரிய மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது, இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மிகவும் குறைவாகவே உள்ளது.

2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாத நிலவரப்படி, இந்தியாவில் 56 கோடி இணையதள பயன்பாட்டாளர்கள் உள்ளதாக இந்திய தொலைத்தொடர்புத்துறை ஆணையம் தெரிவித்துள்ளது.

பெரும்பாலானவர்கள் பிராட்பாண்ட் மூலம் இணைய சேவைகளை பெற்றாலும், தங்களது அலைபேசிகள் வழியாகவே அதிகளவு இணையதளத்தை பயன்படுத்துகின்றனர்.

குறைந்தபட்சம் 512 கேபிபிஎஸ் இணைய வேகத்தை கொண்டிருந்தால் அது பிராட்பாண்ட் என்று இந்தியாவில் அங்கீகரிக்கப்படுகிறது.

இந்தியாவின் நகர்ப்புற பகுதிகளுடன் ஒப்பிடும்போது, கிராமப்புற பகுதிகளில் இணையதள சேவையின் பரவல் மிகவும் குறைவாகவே உள்ளது. அதாவது, இந்தியாவின் கிராமப்புற பகுதிகளில் 100 பேரில் 21.76 பேர் மட்டுமே இணையதள சேவைகளை பயன்படுத்துகின்றனர்.

இதுவரை நடந்தது என்ன?
நாட்டிலுள்ள 2,50,000 கிராம பஞ்சாயத்துகளுக்கு இணைய சேவையை கொண்டு செல்வதன் மூலம் 6,00,000க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு அதிவேக இணைய சேவையை வழங்க முடியுமென்று மத்திய அரசு நினைக்கிறது.

அவற்றில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்களை இணைப்பதற்காக கேபிள் பதிக்கும் பணிகள் பல்வேறு தாமதங்களுக்கு பிறகு 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிக்கப்பட்டது.

இதை குறிப்பிடத்தக்க சாதனையாக மத்திய அரசு கூறி வரும் வேளையில், பதிக்கப்பட்டதாக கூறப்படும் கேபிள்கள் உண்மையிலேயே பயன்பாட்டில் உள்ளதா என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்புகின்றன. எஞ்சியுள்ள கிராம பஞ்சாயத்துக்களை சென்றடையும் இலக்கு, 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் எட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மத்திய அரசின் தரவுகளின் பார்க்கும்போது, கடந்த ஜனவரி மாத இறுதிவரை இந்த திட்டத்தின் கீழ் 1,23,489 கிராமங்களில் ஆப்டிகல் பைபர் கேபிள்கள் பதிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் வைபை ஹாட்ஸ்பாட்டுகள் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இதுவரை 12,500 கிராம பஞ்சாயத்துகளையே இந்த திட்டம் சென்றடைந்துள்ளது.

திட்டம் பழையது; பெயர் புதியது
ஒட்டுமொத்த இந்தியாவை இணையத்தின் மூலம் இணைக்கும் லட்சியத் திட்டத்தை பாஜக அரசாங்கம் மட்டுமின்றி, அதற்கு முந்தைய அரசுகளும் முன்னெடுத்திருந்தாலும், அவற்றால் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற இயலவில்லை.

சோதனைரீதியாக மேற்கொள்ளப்பட்ட ‘நேஷனல் ஆப்டிகல் பைபர் நெட்ஒர்க்’ திட்டம் குறிப்பிடத்தக்க வெற்றியை பெறாததால், 2011ஆம் ஆண்டு, அப்போது ஆட்சியில் இருந்த மத்திய அரசாங்கம் பாரத்நெட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இருப்பினும், 2011 முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் இதன் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு சரிவர செய்யப்படவில்லை என நாடாளுமன்ற நிலைக்குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து 2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நரேந்திர மோதி தலைமையிலான பாஜக அரசு, இந்த திட்டத்திற்கு மறுவடிவம் கொடுத்து செயல்படுத்த தொடங்கியது.

எப்படி வீழ்ச்சியடைந்தது?
2016 – 2017க்கு இடைப்பட்ட காலத்தில் பாரத்நெட் திட்டம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்த நிலையில், அதன் பிறகு பணிகள் சுணக்கமடைய ஆரம்பித்தது.

பாரத்நெட் திட்டத்தை செயற்படுத்தி வரும் நிறுவனம், சென்ற ஜனவரி மாதம் வரை இத்திட்டம் சார்ந்த ஆரம்பக்கட்ட பணிகள் 1,16,411 கிராமங்களை சென்றடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இருப்பினும், சேவை வழங்குவதற்கு தயாராக உள்ளதாக கூறப்படும் 13 மாநிலங்களிலுள்ள 269 கிராம பஞ்சாயத்துக்களை ஆய்வு செய்த டிஇஎஃப் என்னும் அரசுசாரா நிறுவனம், அவற்றில் வெறும் 50 கிராம பஞ்சாயத்துகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகளே முழுவதும் நிறைவடைந்து காணப்பட்டதாக தெரிவித்துள்ளது.

அதிலும், 31 கிராம பஞ்சாயத்துகளில் இணைய சேவை தொடங்கப்பட்டிருந்தாலும், குறிப்பிடப்பட்டதை விட மிகவும் குறைவான இணைய வேகமே உள்ளதாகவும் அந்த அமைப்பை சேர்ந்த ஒசாமா மன்சர் தெரிவித்துள்ளார்.

அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
நிலையற்ற மின்சார சேவை, திருட்டு, தரம் குறைந்த கேபிள்கள் போன்றவை பாரத்நெட் திட்டம் சந்திக்கும் பெரும் பிரச்சனைகளாக கருதப்படுகிறது.

இந்தியாவிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் பிராட்பாண்ட் சேவையை எடுத்து செல்வதை தவிர்த்து, வரும் 2022ஆம் ஆண்டிற்குள் நாட்டில் 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த வேண்டுமென்ற இலக்கை நோக்கி சென்று வரும் சூழ்நிலையிலும், மேற்கண்ட பிரச்சனைகள் தொடர்ந்து வருகிறது.

பாரத்நெட் ஒரு மிகப் பெரிய கட்டமைப்பு திட்டம் என்பதால், இதுபோன்ற பிரச்சனைகளும், அதன் காரணமாக தாமதமும் ஏற்படுவது சாதாரணமானது என்று பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Courtesy : BBC

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here