மகாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் அறிவிப்பு

0
321

ஹரியானா, மகாராஷ்டிரா சட்டப்பேரவைகளில் பதவிக் காலம் நவம்பரில் முடிவடைவதைத் தொடர்ந்து  தேர்தல் தேதிகளை அறிவித்துள்ளார் தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா.  

ஹரியானா சட்டப்பேரவையின் பதவிக் காலம் நவம்பர் 2-இல் முடிவடைகிறது. மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் பதவிக் காலம் நவம்பர் 9-இல் முடிவடைகிறது

மகாராஷ்டிராவில் 288 சட்டமன்ற தொகுதிகளும், ஹரியானாவில் 90 தொகுதிகளும்  உள்ளன

மகாராஷ்டிரா, ஹரியானாவில் தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் விரிவான ஆய்வுகளை செய்துள்ளது. வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 

ஹரியானாவில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 1.82 கோடி. மகாராஷ்டிராவில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 8.94 கோடி

மகாராஷ்ட்ரா மற்றும் ஹரியானாவில் அக்டோபர் 4 ஆம்  தேதி வேட்பு மனு தாக்கலுக்கு இறுதிநாள் என்று அறிவிக்கபட்டுள்ளது. 

செப்டப்மர் 27ஆம் தேதி மகாராஷ்ட்ரா மற்றும் ஹரியானாவில் வேட்பு மனு தாக்கல் தொடங்கும் என்றும் அக்டோபர் 21ஆம்  தேதி மகாராஷ்ட்ரா மற்றும் ஹரியானாவிற்கு சட்டப்பேரவை தேர்தல் நடக்கும் என்றும் அக்டோபர் 24ஆம்  தேதி மகாராஷ்ட்ரா மற்றும் ஹரியானாவில் வாக்கு எண்ணிக்கை நடை பெறும் என்றும் தலைமை தேர்தல் கமிஷனர் அறிவித்துள்ளார். 

இடைத்தேர்தல் அறிவிப்பு

தமிழகத்தில் விக்ரவாண்டி, நாங்குநேரிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

செப்டம்பர் 23ஆம்  தேதி வேட்பு மனு தாக்கல் செய்யவும் , செப்டம்பர் 30 ஆம்  தேதி வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது 

தமிழகத்தில் நாங்குநேரி, விக்ரவாண்டிக்கு அக்டோபர் 21 ஆம்  தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அக்டோபர் 24 ஆம்  தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது . 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here