மகாராஷ்டிராவில் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்களுக்கு கொரோனா

The Maharashtra Police said that 144 police personnel tested positive for COVID-19 in the last 24 hours.

0
341

மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 144 காவலர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவி உள்ள ஆட்கொல்லி கொரோனா மகாராஷ்டிராவில் புரட்டி போட்டு உள்ளது. குறிப்பாக மாநில தலைநகர் மும்பை, புனே நகரங்களில் வைரஸ் தொற்று அசுர வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா தொற்றுக்கு எதிராக களத்தில் முன்னின்று பணியாற்றும் காவல்துறையினரும் அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்

அந்தவகையில் மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்படும் காவலர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 144 காவலர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக 
சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்த காவலர்களின் எண்ணிக்கை 24,023-ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு 2,743 காவலர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 21,030 காவலர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த காவலர்களின் எண்ணிக்கை 250-ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here