மகாராஷ்டிராவின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யாததால் கிராமங்களில் வறட்சி நிலவி வருகிறது.

மகாராஷ்டிராவில் இருக்கும் நந்த்காவுன் மாவட்டத்தில் இருக்கும் நய்தோங்கிரி பகுதியில் 50 வருடங்களுக்கும் மேலாக கால்நடை வளர்க்கும் கௌலிவாடா மக்கள் வசித்து வருகின்றார்கள். தண்ணீர் தட்டுப்பாட்டின் விளைவாக முன்னொரு காலத்தில் நாடோடிகளாக வாழ்ந்த இம்மக்கள், இப்பகுதியில் குடிபுகுந்து 50 வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. எருமை மாடுகள் வளர்ப்பது தான் இவர்களின் குலத் தொழில். கோடை காலத்தில் மட்டுமே தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும்.

ஆனால் கோடை காலம் தொடங்குவதற்கு இன்னும் 4 மாதங்கள் இருக்கின்ற நிலையில், மழை இல்லாததன் விளைவாக இப்பகுதியில் வாழும் மக்கள் தங்கள் வசித்து வந்த இடத்தை விட்டு 100 கி.மீ அப்பால் இருக்கும் சிறிய சிறிய டவுன்களில் வாழ ஆரம்பித்துள்ளனர். அதே போல் அவர்கள் வளர்த்து வந்த கால்நடைகளுக்கு பாதுகாப்பான இடத்தினை தேடி வருகின்றார்கள்.

குழந்தைகளின் கல்வி இவர்களின் இடம்பெயர்தலால் தடை படக்கூடாது என்பதால் குழந்தைகள் மற்றும் பெண்கள் வீட்டில் இருக்க, ஆண்கள் மட்டும் வெளியூர்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். ஏற்கனவே குடும்பங்கள் பிளவு பட தொடங்கிவிட்டன. தற்போதே தண்ணீருக்கு பயங்கர தட்டுப்பாடு நிலவி வருகிறது. மார்ச் – ஏப்ரல் வரை எங்களால் நிச்சயம் இங்கு தாக்குப்பிடிக்க இயலாது என அப்பகுதியில் வசித்து வரும் நம்தே குறிப்பிட்டிருக்கிறார்.

நய்தோங்கிரி கிராம பஞ்சாயத்து நிர்வாகிகள் இவ்வின மக்களை இங்கே இருக்க கூறி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாள் ஒன்றிற்கு கால்நடை பராமரிப்பிற்கே 50,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.

மகாராஷ்டிரா மாவட்டங்களில் பெய்த மழையின் அளவு
மகாராஷ்டிரா மாவட்டங்களில் பெய்த மழையின் அளவு

மகாராஷ்டிராவில் 30 சதவீதத்துக்கும் குறைவாகவே மழை பெய்துள்ளது . மகாராஷ்டிராவில் இருக்கும் 350 தாலுக்காவில் 180 தாலுக்கா மிகவும் மோசமான வறட்சியை சந்தித்துள்ளது என தேவிந்திர பட்னாவிஸ் கூறியிருக்கிறார். மராத்வாடா மற்றும் நாசிக் மாவட்டங்கள் மிகவும் கடுமையான பாதிப்பை அடைந்துள்ளது. ராபி பருவ காலத்திலும் இப்படியான ஒரு வறட்சியை மாநிலம் சந்தித்திருப்பது இதுவே முதல் முறை. ஆறு வருடங்களில் மூன்றாவது முறையாக வறட்சியினை சந்தித்திருக்கிறது.

கௌவ்லிவாடி இனத்தவர்கள் கால்நடைகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அழைத்துச் செல்ல மட்டும் 50,000 ரூபாய் வரை செலவாகிறது. நாள் ஒன்றிற்கு 200 லிட்டர் பால் கறக்கப்பட்டாலும், புதிய இடத்தில் நியாயமான விலை கிடைக்குமா என்பதில் சந்தேகம் இருக்கிறது என்று சம்பா அவ்ஷிகர் கூறிகிறார்.

அவருக்கு பக்கத்து வீட்டில் குடியிருக்கும் தேவ்கிபாய் நிஸ்தானியும் இந்த கிராமத்தில் இருந்து வெளியேற விரும்புகிறார். அவர் குறிப்பிடுகையில் நாள் ஒன்றிற்கு ரூ 600 வரை 3000 லிட்டர் குடிதண்ணீர் டேங்கிற்காக பயன்படுத்துகிறார்கள் என்று கூறியிருக்கிறார். 35 எருமை மாடுகளை வளர்ப்பதற்கு ஒரு நாளிற்கு மட்டும் 5000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. கால்நடைகளுக்காக மட்டுமே நாங்கள் ஊரை விட்டு போகின்றோம். எங்களுக்கு வேறு வழியில்லை. குழந்தைகளை பராமரிப்பதற்கு மட்டும் ஒரு சிலர் தங்களின் குடும்பத்தோடு வாழ்ந்து வருகின்றார்கள்.

எங்களுடைய கால்நடைகளின் சாணத்தினை இங்கிருக்கும் நில புலன் உடையவர்களுக்கு இலவசமாக தருகின்றோம். ஆனால் கால்நடைகளுக்குத் தேவையான உணவினைப் பெற நாங்கள் வேறொருவர் காட்டில் வேலை செய்ய வேண்டும் என்று நிஸ்தானியின் மகன் கூறுகிறார்.

நய்தோங்கரி பகுதியில் இருந்து 300 கி.மீ தொலைவிற்கு அப்பால் இருக்கும் மராத்வாடா பகுதியில் 2.5 ஏக்கர் பரப்பளவில் பருத்தி விவசாயம் செய்து வந்தார் பாலாசஹேப் அனூஷ் வறட்சியின் காரணமாக தற்போது கரும்பு விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். தண்ணீர் பற்றாக்குறையால் ராபி பருவத்தில் பயிர்கள் வளர்ப்பதில் பிரச்சனை இருக்கிறது . அதனால் பலர் கரும்பு வளர்ப்பினை தேர்வு செய்துள்ளனர்.

மராத்வாடா பகுதியில் கரும்பை பல விவசாயிகள் பயிரிட்டு வருகிறார்கள். பீட், அகமத் நகர், மற்றும் நாசிக்கின் பல்வேறு பகுதியில் வாழ்ந்த 7 முதல் 8 லட்சம் மக்கள் கர்நாடகா, குஜராத், மற்றும் மத்திய பிரதேசத்திற்கு வேலைக்கு செல்கின்றார்கள்.

Courtesy : The Indian Express

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here