மகாராஷ்டிராவில்  ( ஆகஸ்ட் -1) இன்று புதிதாக 9,601 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதன்படி, மகாராஷ்டிரத்தில் புதிதாக 9,601 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 322 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து மகாராஷ்டிரத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 4,31,719 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2,66,883 பேர் குணமடைந்துள்ளனர், 15,316 பேர் பலியாகியுள்ளனர். இன்றைய தேதியில் 1,49,214 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மும்பை:

மும்பையில் புதிதாக 1,059 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  மேலும் 45 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 20,749 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 6,395 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 87,906 பேர் குணமடைந்துள்ளனர்.

தாராவி:

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் புதிதாக 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,560 ஆக உயர்ந்துள்ளது. எனினும் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை மேலும் குறைந்து 72 ஆக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here