கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் ஒரு ஆண்டுக்கும் மேலாக உலக நாடுகளை உலுக்கி வருகிறது. தற்போது பல நாடுகளில் கொரோனாவின் 2வது அலை வீசுவதால் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பூசி ஒரு பக்கம் போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனினும், தொற்று பரவலை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

குறிப்பாக, நாட்டின் மொத்த வைரஸ் பாதிப்பில் 85 சதவீதம் மகாராஷ்டிரா, தமிழகம், கேரளா உள்பட 8 மாநிலங்களில் இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, கொரோனா பரவல் அதிகரிப்பால், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் காவல் ஆணையத்தின் அதிகாரத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. கடந்த மார்ச் 15 முதல் வரும் 21-ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.  
அத்தியாவசிய தேவைகள் மட்டுமே செயல்படும்.

கொரோனா அதிகரித்தால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் ஊரடங்கு அமல்படுத்த வேண்டிவரும். சில இடங்களில் வரும் நாட்களில் ஊரடங்கு அமலாகும் என மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார். தேவையில்லாமல் யாரும் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம என்று காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மகாராஷ்டிராவில் உள்ள அனைத்து தியேட்டர்கள், ஆடிட்டோரியங்கள் மற்றும் அலுவலகங்கள் மார்ச் 31 வரை 50 சதவீதத்துடன் மட்டுமே இயங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே தியேட்டர்கள், ஆடிட்டோரியங்கள் மற்றும் அலுவலகங்களில் அனுமதிக்க வேண்டும் என்றும் கிருமிநாசினி, முகக்கவசம், சமூக இடைவெளி கண்டிப்பாக கடைபிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை மற்றும் பிற அத்தியாவசிய சேவைகள் தவிர அனைத்து தனியார் அலுவலகங்களும் 50% திறனில் செயல்பட வேண்டும். உற்பத்தித் தளத்தில் பராமரிக்கும் நோக்கத்திற்காக சமூக இடைவெளியுடன் உள்ளூர் அதிகாரிகள் ஒப்புதல் அளித்தபடி உற்பத்தி அலகுகள் பணி மாற்றங்களை அதிகரிக்க அனுமதிக்கப்படலாம்’ என்று அரசாங்கம் கூறியது, பாதுகாப்பு விதிகளை மீறும் எந்தவொரு அலகுக்கும் அரசாங்கம் வரை மூடப்பட வேண்டும் அதை மீண்டும் திறக்க அனுமதிக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று இரவு வரை 24 மணி நேர காலகட்டத்தில், 25,833 புதிய கோவிட் -19 வழக்குகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here