மகாராஷ்டிர மாநிலத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்தனர்.

மும்பையிலிருந்து 110 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பால்கர் மாவட்டம் தஹானு கடற்பகுதி. சனிக்கிழமை (இன்று) பள்ளி மாணவர்கள் 40 பேரை ஏற்றிச் சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படகில் இருந்த மாணவர்கள் கடலில் விழுந்து தத்தளித்தனர்.

boat-1

இது குறித்து தகவல் அறிந்த கடலோர காவல்படையின் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மாணவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் 32 மாணவர்கள் மீட்கப்பட்டனர். இரண்டு மாணவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் காணமல் போன ஆறு பேரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்