ஜூன் 10-ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவோம் மாவட்டத்தில் உள்ள வகாதி என்ற கிராமத்தில் இருக்கும் கிணற்றில் மூன்று தலித் சிறுவர்கள் குளித்துள்ளனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் சிறுவர்களை நிர்வாணமாக வைத்து தாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகியதையடுத்து, இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 3 சிறுவர்களும் தலித் பிரிவினர் என்பதால் அங்குள்ள உயர்சாதியினர் இந்த கொடூரத்தை செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து அம்மாநில சமூக நீதி துறை மந்திரி இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து குஜராத் எம் எல் ஏ மற்றும் தலித் சமூகத் தலைவர் ஜிக்னேஷ் மேவானி குஜராத் உனாவில் தலித்துகளுக்கு நடந்த கோடூரம் தற்போது மஹாராஷ்டிராவில் தலித் சிறுவர்களுக்கும் நடந்துள்ளது . இந்த தலித் சிறுவர்கள் கிணற்றில் குளித்ததற்காக அங்குள்ள உயர்சாதியினர் இந்த கொடூரத்தை செய்துள்ளனர். உனாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்திருந்தால் இந்த மாதிரியான நிகழ்வு நடந்திருக்காது.

நம் நாட்டில் இந்த மாதிரியான சமூகம் உருவாகி வருவதைப் பார்த்து நாம் வெட்கி தலைகுனிய வேண்டும் . இருள் பிசாசு படைகளான ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் வென்றால் நம் நாட்டின் நிலைமை என்னவாகும் என்று யோசித்து பாருங்கள் என்றும் டிவீட் செய்துள்ளார்.

தோலுக்காக பசுவை கொன்றதாக கூறி ஜூலை 11ஆம் தேதி தலித் இளைஞர்கள் சிலரை, பசு காவலர்கள் நடுவீதியில் கட்டி வைத்து அடித்தனர். உனா நகருக்கு அழைத்து வந்து அவர்களை தாக்கி நடுவீதியில் பொதுமக்கள் முன்னிலையில் அரைநிர்வாணமாக அழைத்துச் சென்றனர்.
இதனால் மாநிலம் முழுவதும் தலித் அமைப்பினர் போராட்டம் நடத்தினர் , நாடாளுமன்றத்திலும் இப்பிரச்சினைப் பற்றி பேசினர்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்