மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 4841 பேருக்கு பாதிப்பு

Coronavirus LATEST Updates: The Union health ministry on Thursday said that a central team led by health ministry joint secretary Lav Agarwal will visit Gujarat, Maharashtra and Telangana on 26 and 29 June.

0
150

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், மகாராஷ்டிராவில் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 4 ஆயிரத்து 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 47 ஆயிரத்து741 ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நாளில்192 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 6,931 ஆக அதிகரித்துள்ளது.

அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நேற்று(வியாழக்கிழமை) ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 3,661 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 63 ஆயிரத்து 342 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here