மகாராஷ்டிராவில் இன்று(ஆகஸ்ட் 05) 334 பேர் கொரோனாவுக்கு பலி

Maharashtra reported 10,309 fresh cases of Covid-19 in the last 24 hours, taking its tally to 4,68,265 on Wednesday.

0
119

இந்தியாவிலேயே கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. இங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

மகாராஷ்டிராவில் இன்று(புதன்கிழமை)  10,309 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 334 பேர் பலியாகியுள்ளனர். 6,165 பேர் குணமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 4,68,265 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,45,961 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3,05,521 பேர் குணமடைந்துள்ளனர். 16,476 பேர் பலியாகியுள்ளனர்.

அங்கு குணமடைவோர் விகிதம் 65.25 சதவிகிதம். இறப்பு விகிதம் 3.52 சதவிகிதம்.

மும்பையில் இன்று 1,125 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 42 பேர் பலியாகியுள்ளனர். அதேசமயம் 711 பேர் குணமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,19,255 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 91,673 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 6,588 பேர் பலியாகியுள்ளனர். இன்றைய தேதியில் அங்கு 20,697 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here