மகாராஷ்டிராவில் இன்று(அக்.18) 9 ஆயிரத்து 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

0
60

மகாராஷ்டிராவில் இன்று 9 ஆயிரத்து 60 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால்  கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 15 லட்சத்து 95 ஆயிரத்து 381 ஆக அதிகரித்துள்ளது. 

மாநிலத்தில் வைரஸ் தாக்குதலுக்கு இன்று 150 பேர் உயிரிழந்தனர். இதனால் மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்து 115 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 82 ஆயிரத்து 973 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 11 ஆயிரத்து 204 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

இதனால் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 13 லட்சத்து 69 ஆயிரத்து 810 ஆக அதிகரித்துள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here