உலகின் ஆகச்சிறிய உயிரான வைரஸ் மனித குலத்தையே மாற்றிக் கொண்டிருக்கிறது. இறையச்சத்தாலும் உண்மையின் பலத்தாலும் அறம் பேசி சாதாரண மனிதர் ஒருவர் ஒரு சாம்ராஜ்யத்தையே பணிய வைக்க முடியும் என்பதை நிரூபித்தவர் மகாத்மா காந்தி. லண்டனில் இங்கிலாந்து மன்னரைச் சந்தித்துவிட்டு வெளியே வந்த மகாத்மா காந்தியிடம் நிருபர்கள் கேட்டார்கள்: “மன்னரிடம் பேசியதால் ஊக்கம் பெற்றிருக்கிறீர்களா?” இதற்கு மகாத்மாவின் பதில் இதுதான்: “ஊக்கத்தைத் தர வல்லவன் இறைவன் மட்டும்தான். மன்னர்களால் அதைத் தர முடியாது.” இதுதானே பேருண்மை. தன்னைப் பின்பற்ற வந்தவர்களுக்கு அவர் சொன்னது ஒன்றுதான்: “உண்மையாக இருங்கள்; அச்சமின்றி இருங்கள்.” உண்மையாக இருப்பதென்பது இறையச்சத்துடன் ஒழுகுவது. அப்படி நடந்துகொண்டால் உங்களுக்கு இங்கு எந்த சாம்ராஜ்யத்தைக் கண்டும் அச்சம் உண்டாகாது.

இந்து தர்மம் உள்பட அனைத்து தர்மங்களும் “யாம் பெற்ற இன்பம் பெறுக இந்த வையகம்” என்பதைத்தான் கருப்பொருளாகக் கொண்டிருக்கின்றன. லண்டனில் பாரிஸ்டர் படிப்புக்குச் சென்றபோது மகாத்மா காந்தி மானுட உயர்வுக்கு இறை நினைவை அடிப்படையாகக் கொள்ளுகிற தியாசபிகல் சொசைட்டியில் தன்னை இணைத்துக் கொள்கிறார். இஸ்லாம், இந்து மதம், பவுத்தம், ஜைனம், கிறிஸ்தவம், யூத மதம் உள்பட அனைத்துக்கும் அடிப்படையானது “கர்த்தருக்குப் பயப்படுதல். உண்மையாக இருத்தல். இந்த அற உணர்வால் மன ஊக்கம் பெற்று மனித குலத்துக்கு நன்மை பயத்தல்” என்பதை ஆழமாக அறிகிறார். அதனை நடைமுறைப்படுத்திப் பார்த்து தென் ஆப்ரிக்காவில் மானுட சமத்துவத்துக்குப் பெரும் பங்காற்றுகிறார். அந்த நடைமுறை அறிவைத் தன் தாய் நாட்டின் விடுதலைக்குக் கருவியாக மாற்றுகிறார்.

ஒவ்வொரு மனித உயிருக்கும் இறைவன் அளித்த சுதந்திரத்தைப் பறித்து யாரும் அந்த உயிரை அடிமைப்படுத்தக் கூடாது. இந்தச் சமத்துவ சிந்தனையிலிருந்து பெறப்பட்ட தார்மீக பலம்தான் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் தார்மீக வீழ்ச்சியை உறுதி செய்தது. நமக்குச் சுதந்திரம் கிடைத்தது. அச்சமின்மையை தனிமனித அவசியமாக மாற்றியதில்தான் காந்தியின் அறப்புரட்சி வென்றது. இந்த வழிமுறையை ஆரம்பத்திலிருந்தே காங்கிரஸ் நம்பவில்லை. மகாத்மா காந்தி இதனைச் செய்து காட்டியதும் அதனை ஏற்றுக்கொண்டார்கள். எதனையும் வெற்றிகரமாக நடத்திக் காட்டிய பிறகு பின்பற்றுவதைத் தவிர வேறு வழியிருக்க முடியாது. காந்திக்குப் பிறகு அமெரிக்காவில் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், தென் ஆப்ரிக்காவில் நெல்சன் மண்டேலா ஆகியோரும் சத்தியமும் அகிம்சையுமான அந்த வழியைப் பின்பற்றினார்கள். வெற்றியை ஈட்டினார்கள்.

இறையச்சமே மகாத்மா காந்தியை வழிநடத்தியது
மகாத்மா காந்திக்கு நீங்களும் நானும் செய்ய வேண்டியது இதுதான்

நாதமும் தாளமும் நீயானாய்

டோலோ 650யும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களும்

கணக்கன் கேட்பான், எடப்பாடியாரே

நாடார்களின் வெற்றிக் கதை: அடிமைத்தனத்திலிருந்து ஆட்சிக்கு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here