நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை (இன்று) மகாசிவராத்திரி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மகாசிவராத்திரியை முன்னிட்டு அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. காசி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பிரசித்திபெற்ற கோவில்களில், மக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பாலாபிஷேகம், ஆராதனை போன்றவற்றை செய்து வருகிறார்கள்.

siva-1

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள தப்கேஷ்வர் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அதே போன்று, ஹரித்துவார், டெல்லி சாந்தினி சவுக், ஜம்மு காஷ்மீர் ஷிவ்கோரி உள்ளிட்ட பிரசித்திபெற்ற ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

இதையும் படியுங்கள் : யானையின் பிளிறல்கள் உங்கள் தியானங்களைக் கலைக்கும்: மு.ஆனந்தன்

மகாசிவராத்திரியை முன்னிட்டு பிரதமர் மோடி, தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

siva-3

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்