மலேசியவில் நடைபெற்று வரும் மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஜூன் 3 ஆம் தேதி துவங்கி ஜூன் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டியில் வங்காளதேசம், இந்தியா, மலேசியா, தாய்லாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகிய 6 அணிகள் இதில் பங்கேற்று விளையாடின.

குருப் சுற்றுக்கள் முடிந்த நிலையில், பட்டியலில் முதலிடம் வகித்த இந்திய அணி, பட்டியலில் இரண்டாம் இடம் வகித்த பாகிஸ்தான் அணியுடன் மோதியது. இந்தப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி டாஸ் ஜெயித்து பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்து இருந்தது. இந்திய தரப்பில் ஏக்தா பிஸ்ட் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து, 73 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. இந்திய வீராங்கனைகளான மந்தனா 38 ரன்களையும் கெளர் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமலும் இருந்தார். முடிவில் இந்திய அணி 16.1 ஓவர்களில் 75 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது. இதையடுத்து ஞாயிறன்று நடைபெறவுள்ள இறுதிச்சுற்றுக்கு ஆட்டத்துக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.

இதையும் பாருங்கள் :

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்