ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ப்ளிப்கார்டின் பிக் பில்லியன் டே சேல் வரும் 10ஆம் தேதி ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ப்ளிப்கார்ட் அறிவிக்கும் 5வது பிக் பில்லியன் டே என்பதுகுறிப்பிடத்தக்கது.

பிக் பில்லியன் டே அன்று மொபைல் போன், டிவி, வீட்டிற்கு தேவையான பொருட்கள் உள்ளிட்டவை அதிரடி ஆஃபரில் விற்பனை செய்யப்படுகிறது.

இதனை விளம்பரப்படுத்துவதற்காக கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகர்கள் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்டவர்களை ப்ளிப்கார்ட் அணுகியிருக்கிறது.

டி.வி. மற்றும் ஹோம் அப்ளையன்ஸ் பொருட்களுக்கு 80 சதவீதம் வரை ஆஃபர் அளிக்கிறது ப்ளிப்கார்ட்.

மேலும் எச்.டி.எப்.சி. வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ப்ளிப்கார்ட்டில் பொருள் வாங்க 10 சதவீதம் வரை சலுகை அளிக்கிறது.

500-க்கும் மேற்பட்ட பிராண்டுகளில் சுமார் 38,000-க்கும் மேற்பட்ட பொருட்கள் விற்பனைக்கு தயாராக உள்ளது. டிஜிட்டல் கேமரா, டேப்லெட்கள், போர்ட்டபிள் ஸ்பீக்கர், ஆப்பிள் ஐ-பேட் உள்ளிட்டவற்றிற்கு அதிக ஆஃபர் வழங்கப்படவுள்ளதால் பிக் மில்லியன் டேவை வாடிக்கையாளர்கள் மிக ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்