ப்ரியங்கா, தீபிகாவைத் தொடர்ந்து ஹாலிவுட் படத்தில் நடிக்கும் ராதிகா ஆப்தே

0
126
Radhika Apte

ப்ரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் இருவரும் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளனர். இவர்களுக்கு முன்னால் ஐஸ்வர்யா ராய். இவர்கள் வரிசையில் ராதிகா ஆப்தேயும் ஹாலிவுட் செல்கிறார்.

ஹாலிவுட்டில் வேர்ல்ட் வார் 2 என்ற படம் தயாராகிறது. அடுத்த மாதம் படப்பிடிப்பை தொடங்குகின்றனர். இதில் இங்கிலாந்தின் உளவாளியாக செயல்பட்டு நாஜி படைகளால் சுட்டுக் கொல்லப்பட்ட நூர் இனயத் கானின் கதாபாத்திரம் வருகிறது. நூர் இனயத் கான் இந்தியர். திப்பு சுல்தானின் வம்சாவழியைச் சேர்ந்தவர். நூர் இனயத் கானின் வேடத்தில் நடிக்க ராதிகா ஆப்தேயை தேர்வு செய்துள்ளனர்.

ஹாலிவுட் படங்களின் பெரும் சந்தையாக ஆசிய மாறியிருக்கிறது. இதனால், ஆசியாவைச் சேர்ந்த நட்சத்திரங்களை படங்களில் நடிக்க வைப்பது அதிகரித்துள்ளது. நாளை தன்ஷிகா, ஹன்சிகாவுக்கும் ஹாலிவுட் வாய்ப்பு கதவைத் தட்டலாம்.
இதையும் படியுங்கள்: ஸ்ரீரெட்டியின் செக்ஸ் புகார் – சிக்கிய பிரபல இயக்குனர்

இதையும் படியுங்கள்: #NoIPLinChennai: சோறா, ஸ்கோரா? தெறிக்கவிட்ட தமிழ் மக்கள்

இதையும் படியுங்கள்: அசிஃபாவை கொன்றது சரியே” – சமூக ஊடகத்தில் பதிவிட்டவரை பணி நீக்கம் செய்த கோடக் மஹிந்திரா வங்கி

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்