ப்ரித்திகா யாஷினி: திருநங்கைகளின் நம்பிக்கை நட்சத்திரம்

இந்தியாவின் முதல் திருநங்கை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இவர்தான்.

0
480

ப்ரித்திக்கா யாஷினியிடம் சற்று முன்பு பேசினேன்; வாழ்த்துகளைச் சொன்னேன். குரலில் எப்போதும் போல் உற்சாகம். ஞாயிற்றுக் கிழமையன்று (ஏப்ரல் 2, 2017) ப்ரித்திக்கா யாஷினியை இந்தியாவின் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளராக நியமனம் செய்ததன் மூலம் தமிழ்நாடு வரலாறு படைத்திருக்கிறது; எளிய மக்களைச் சமூகத்தில் இரண்டறக் கலக்கச் செய்யும் எண்ணத்துடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இப்போது டிஜிட்டல் ஊடகத்தை உருவாக்கியபோது அதன் தூதுவராக தேர்வு செய்யப்பட்டார் ப்ரித்திகா. சமூகத்தால் புறந்தள்ளப்பட்டு யாசகம் கேட்பதும் பாலியல் தொழில் செய்வதுமாக வாழ்வாதாரத்துக்குப் போராடி வரும் திருநங்கைகளின் சமூகத்துக்குக் கலங்கரை விளக்கம்போல உயர்ந்து நிற்கிறார் ப்ரித்திகா; ப்ரித்திகா தான் கொண்ட உறுதியால் நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறி, இறங்கியும் ஊடகங்களின் ஆதரவோடும் இதனைச் சாதித்தார்.

இதையும் பாருங்கள்: இந்தியாவின் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளராகும் ப்ரித்திகாவுக்கு வாழ்த்துகள்

இப்போதுவின் தூதுவராக ப்ரித்திகா யாஷினி திருநங்கைகள் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு அவசியம் என்பதை உரத்த குரலில் பேசினார்; அந்த வீடியோவை இங்கே பாருங்கள்; தனது முன்னேற்றம் என்பதைத் தாண்டி ஒட்டுமொத்த திருநங்கைகளின் வளர்ச்சியில் அக்கறையும் ஆர்வமும் கொண்டு தொடர்ந்து பேசி வந்தார். ப்ரித்திகாவைப்போல இன்னும் பல திருநங்கைகள் சமூகத்தின் விளிம்புகளிலிருந்து முன்னேறி, மேலெழுந்து வர வேண்டும். படிப்பதிலும் புதிய வாய்ப்புகளைத் தேடுவதிலும் ப்ரித்திகாவுக்கு இருந்த ஆர்வமும் தன்னூக்கமும்தான் அவரை இந்த இடத்துக்குக் கொண்டு வந்துள்ளது; தருமபுரி மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுள்ள ப்ரித்திகா விரைவில் தருமபுரி நகரில் பணியில் சேர்வார். இதற்கு முன்பு ஒரு வருட கால தீவிரப் பயிற்சியை சென்னை வண்டலூரிலுள்ள காவல் பயிற்சிக் கல்லூரியில் நிறைவு செய்தார். காவல் பயிற்சிக் கல்லூரியில் சேரும் முன்பு ப்ரித்திகா அளித்த பேட்டியை இங்கே படியுங்கள்.

இதையும் பாருங்கள்: இப்போதுக்காக ப்ரித்திகா யாஷினி வழங்கிய செய்தி

இதையும் பாருங்கள்: ப்ரித்திகாவின் கதையை வைத்து ஒரு ஆவணப்படம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்