நெட்ஃப்ளிக்ஸ்(Netflix) தொடர்கள், திரைப்படங்களை ஏர்டெல் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்கள் இனி ஏர்டெல் டிவி, மை ஏர்டெல் ஆப்களில் வழியாகக் காணலாம். அதற்குரிய கட்டணத்தையும் ஏர்டெல் பில்லில் சேர்த்தே கட்டலாம்.

நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தனது போஸ்ட்பெய்டு, V-Fiber Home Broadband திட்ட சந்தாதாரர்களுக்கு இவ்வசதியை ஏர்டெல் அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும், குறிப்பிட்ட சில பிளான்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மூன்று மாத நெட்ஃப்ளிக்ஸ் ஏர்டெல் டிவி ஆப், மை ஏர்டெல் ஆப் மூலம் இலவசமாக வழங்கப்படும்.

DllnjONU8AAaoT8

இந்த மூன்று மாத இலவச சேவை குறிப்பிட்ட போஸ்ட்பெய்டு, பிராட்பேண்ட் பிளான்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.
இதுபற்றிய விவரங்கள் வரும் வாரங்களில் அறிவிக்கப்படும்.

இந்த பிளான்களில் இல்லாதவர்கள் அவற்றுக்கு அப்கிரேடு செய்துகொண்டு இந்த மூன்று மாத இலவச நெட்ஃப்ளிக்ஸ் சேவையைப் பெறலாம்.
இந்த பிளான்களுக்கு அப்கிரேடு செய்யாமல் சாதாரணமாகவும் Airtel TV, My Airtel ஆப்கள் மூலமாக நெட்ஃப்ளிக்ஸ் தொடர்களைக் கண்டுகளிக்கலாம். கட்டணத்தை போஸ்ட்பெய்டு பில்லுடன் சேர்த்து கட்டிவிட வேண்டும்.

மூன்று மாத இலவச சந்தா பெற்றவர்களும் அக்காலம் முடிந்ததும், தங்கள் ஏர்டெல் போஸ்ட்பெய்டு, பிராட்பேண்ட் பில்லுடன் நெட்ஃப்ளிக்சுக்கான கட்டணத்தைச் செலுத்தி நெட்ஃப்ளிக்ஸ் நிகழ்சிக்களைக் தொடர்ந்து காணலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here