போலீஸ் பிடியில் உள்ளவர்களை விடுவிக்க வலியுறுத்தி மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் 5 பெண்கள் தீக்குளிக்க முயற்சி

0
158

போலீஸ் பிடியில் உள்ள உறவினர்களை விடுவிக்க வலியுறுத்தி மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் 5 பெண்கள் திடீரென தீக்குளிக்க முயன்றனர்.

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரி, இவரது மகன் கவாத்து திருப்பதி மற்றும் இவரது உறவினர்கள் பாண்டி, பிரேம், மொட்டை மணி, மணி. இவர்களை போலீஸார் கேராளாவுக்கு வேலைக்கு சென்றபோது கைது செய்துள்ளனர்.

தீக்குளிக்க முயன்ற பெண்கள் தங்கள் உறவினர்கள் மீது போலீஸார் பொய் வழக்கு பதிந்து இருப்பதாகக் கூறி மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றனர்.

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் பங்கேற்கும் விழா குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஆட்சியர் கொ.வீரராகவராவ் தலைமையில் அதிகாரிகள் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இப்பணி முடிந்து அமைச்சர் உள்ளிட்டோர் புறப்படத் தயாரானபோது, திடீரென ஆட்சியர் அலுவலகத்துக்குள் புகுந்த ஈஸ்வரி உட்பட 5 பெண்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

அவர்களைக் காப்பாற்றிய போலீஸார் 5 பெண்களையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர்கள், கவாத்து திருப்பதியின் தாயார் ஈஸ்வரி, போலீஸில் சிக்கியுள்ளவர்களின் உறவினர்கள் லட்சுமி, காந்திமதி, லட்சுமி, ஆறுமுகத்தாய் என்பது தெரியவந்தது.

கவாத்து திருப்பதி, மணி மற்றும் உறவினர்களை நாங்கள் பார்க்க அனுமதிக்க வேண்டும் என்பதற்காகவே தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டோம் என்று அப்பெண்கள் கூறினர் . பெண்கள் 5 பேரையும் தற்கொலைக்கு முயன்றதாக போலீஸார் கைது செய்தனர்.

Source : Times Of India

இதையும் படியுங்கள்: ’உன்னைப் பாதுகாக்க முடியவில்லை… மன்னித்துவிடு அசிஃபா’

இதையும் படியுங்கள்: #BanSterlite: “மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை மூடிட்டுப் போக வேண்டியதுதானே”

இதையும் படியுங்கள்: உன்னாவ், கத்துவா பற்றிய கார்ட்டூன்கள் (தொகுப்பு)

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்