போலீசார் கை காட்டி வாகனங்களை நிறுத்தக்கூடாது

0
517


பெங்களூரு நகரில் உள்ள 3  மக்களைவைத்  தொகுதிகளுக்கு வருகிற 18-ந்தேதி முதல்கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பாதுகாப்பு பணி குறித்து போலீசார் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள். வாக்குச்சாவடி மையங்களில் போலீசார் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை குறித்து அனைத்து போலீசாருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.

மேலும் தேர்தலையொட்டி போலீசார் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து 5 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் தயாரித்துள்ளது. இந்த புத்தகத்தின் நகல் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் வழியாக போலீஸ்காரர்களின் செல்போன்களுக்கு அனுப்பப்பட உள்ளது.

இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியின் சின்னமாக ‘கை’ உள்ளது. வாக்குச்சாவடியின் அருகே கட்சியின் சின்னத்தை யாரும் பயன்படுத்த கூடாது என்று தேர்தல் நடத்தை விதிமுறை உள்ளது. பொதுவாக போலீசார் உள்ளங்கையை காட்டி வாகனங்களை நிறுத்துவது வழக்கமாக உள்ளது.

இவ்வாறு உள்ளங்கையை காட்டி வாகனங்கள் நிறுத்தும்போது அது காங்கிரஸ் கட்சியின் ‘கை’ சின்னத்தை குறிப்பதாக இருக்கிறது. இதனால், போலீசார் தேர்தல் பணியின்போது காங்கிரஸ் கட்சியின் சின்னத்தின் வடிவில் தங்களின் கையை காண்பிக்கக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

போலீசாருக்கு நூதன அறிவுரை வழங்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here