தலைமை விசாரணை அதிகாரி சந்தீப் தாம்கட்கே , 2006 இல் நடந்த துளசிராம் பிரஜாபதி என்கவுன்டர் வழக்கில் பாஜக தலைவர் அமித் ஷா, மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளான டிஜி வன்சாரா, எம்.என்.தினேஷ், ராஜ்குமார் பாண்டியன் ஆகியோர் “முக்கிய சதிகாரர்கள்” என்று சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் கூறியுள்ளார்

நவம்பர் 21, 2001 கேடர் ஐபிஎஸ் அதிகாரி சந்தீப் தாம்கட்கே . குற்றவாளிகள் – அரசியல்வாதிகள் -போலீஸார் நெட்வொர்க்குடன் அமித் ஷா தொடர்பில் இருந்தார். அந்த நெட்வொர்க்கின் கட்டளைப்படிதான் பிரஜாபதி, அவருடைய நண்பர் ஷொராபுதீன் சேக் , மற்றும் அவரது மனைவியும் கொல்லப்பட்டனர்.

அமித் ஷாவும், குலாப் சந்த் கட்டாரியா (தற்போது இவர் ராஜஸ்தான் உள்துறை அமைச்சர்) ஆகியோர் இந்த குற்றவாளிகள் – அரசியல்வாதிகள் -போலீஸார் நெட்வொர்க்கிலிருந்து பயன் பெற்றார்கள் என்று 2012 ஆம் ஆண்டு தாக்கல் செய்த குற்றபத்திரிகையில் சந்தீப் தாம்கட்கே கூறியுள்ளார். இந்த குற்றவாளிகளின் பெயர் பட்டியலில் பிரஜாபதி, ஷொராபுதீன், அசாம் கான் போன்றோர் இருந்தனர். சிபிஐ வெளியிட்ட தகவலின்படி ஷொராபுதீனும் , பிரஜாபதியும் போலீஸ் மற்றும் அரசியல்வாதிகளின் துணையோடு மிரட்டி பணம் பறிப்பதில் ஈடுபட்டு வந்தனர். போலீஸ் மற்றும் அரசியல்வாதிகளின் கட்டளைகளை ஷொராபுதீன் மீறிய போது அவரை கொலைசெய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டது. அந்த சதித் திட்டம் 2005, நவம்பர் 23 ஆம் தேதியன்று செயல்படுத்தப்பட்டது .

தாம்கட்கே அளித்த இந்தத் தகவல் மிகவும் முக்கியமான நேரத்தில் வந்திருக்கிறது. ஏனென்றால் ஒவ்வொரு சாட்சியும் எதிர் சாட்சியங்களாக மாறினர். தாம்கட்கேயின் சீனியர் அதிகாரியாக இருந்த ஐபிஎஸ் அமிதாப் தாக்கூர் எதிர் சாட்சியமாக மாறவில்லையென்றாலும் அவர் தனது விசாரணையில் சேகரித்த தகவல்களை வலியுறுத்தும் வகையில் எங்கேயும் கூறவில்லை. அமித் ஷாவும், மற்ற ஐபிஎஸ் அதிகாரிகளும் அரசியால் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் (லஞ்சம் ) பலன் பெற்றார் என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்று நவம்பர் 19 ஆம் தேதி அமிதாப் தாக்கூர் கூறினார்.

பாஜக தலைவர் அமித் ஷா, மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளான டிஜி வன்சாரா, எம்.என்.தினேஷ், ராஜ்குமார் பாண்டியன் ஆகியோர் வழக்கிலிருந்து ஏற்கனவே விடுவிக்கபட்டுவிட்டனர். இந்த வழக்கின் ஆரம்பத்தில் 35 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தது . இந்த வழக்கில் தற்போது 22 பேர் மீது மட்டுமே, அதாவது 21 போலீஸ்காரர்கள் மீதும், ஷொராபுதீனின் மனைவி கவுசர் பீ – யை கொல்வதற்கு முன்னால் அடைத்து வைக்கப்பட்டிருந்த பண்ணை வீட்டின் முதலாளி மீதும் விசாரணை நடைபெற்று வருகிறது .

அமிதாப் தாக்கூரின் விசாரணையில் அமித் ஷா குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தாலும், தாம்கட்கேதான் அவரை கைது செய்தார். 2014 , டிசம்பர் 30 ஆம்தேதி சிபிஐ யின் சிறப்பு நீதிபதி எம் பி கோசவி அமித் ஷாவை விடுவித்தார். அமித் ஷா விடுவிக்கபட்டதை எதிர்த்து சிபிஐ மேல் முறையீடு செய்யாதது அப்போது மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது .

தாம்கட்கே 2011 லிருந்து 2015 வரை சிபியில் பல முக்கிய பொறுப்பில் இருந்தவர். மும்பையில் சிபிஐ காவல் கண்காணிப்பாளராக இருந்தவர். இவர் விசாரித்த போது அமித் ஷா,வன்சாரா, மேலும் பல அதிகாரிகள் இந்த சதித் திட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.

போன் செய்தவர்களின் பட்டியலில் சதித் திட்டம் தீட்டிய அமித் ஷா , வன்சாரா, பாண்டியன் , விபுல் அகர்வால், ஆஷிஷ் பாண்டியா, டாபி, சீனிவாச ராவ் ஆகியோர் இருக்கிறார்கள் என்றிருந்தபோதும் , நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை. பாண்டியா, டாபி , ராவ் ஆகியோர் மட்டுமே விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்.

இந்தக் கொலைகளை நிகழ்த்த சதி திட்டம் தீட்டிய போது இவர்களின் போன் உரையாடல்கள் குறித்த பட்டியல் குற்றப்பத்திரிகையில் முக்கிய பங்கு வகிக்கிறது. கொலை நடப்பதற்கு முன்னும், பின்னும் நடந்த இவர்களின் போன் உரையாடல்கள் குறித்த பட்டியலை சிபிஐ முக்கிய சாட்சியாக குற்றப்பத்திரிகையில் சமர்பித்துள்ளது. இருந்தபோதும் 35 குற்றவாளிகளில் 13 பேரை போதிய ஆதாரங்கள் இல்லாததாக காரணம் காட்டி விசாரணை நீதிமன்றம் விடுவித்தது .

2005 , நவம்பர் 23 ஆம் தேதி ஷொராபுதீன், கவுசர் பீ, மற்றும் பிரஜாபதி ஆகியோர் பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருந்த போது, சொராபுதீனையும், அவரது மனைவியயும் போலீஸ் கடத்தினார்கள் என்று சிபிஐ தகவல்கள் தெரிவிக்கிறது . பின்னர் 2005, நவம்பர் 26 ஆம் தேதி ஷொராபுதீன் என்கவுன்டரில் கொல்லப்பட்டார். ஆனால் ஷொராபுதீனின் மனைவி கவுசர் பீ – யின் கொல்லப்பட்ட உடல் எங்கேயும் கிடைக்கவில்லை. சாட்சிகளின் அறிக்கைப்படி கவுசர் பீயூம் கட்டத்தப்பட்டு கொல்லப்பட்டார் என்று சிபிஐ வெளியிட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரஜாபதி கைது செய்யப்பட்டு உதய்பூர் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் 2006 ஆம் ஆண்டு என்கவுன்டரில் கொல்லப்பட்டார்.

தாக்கூர் 2010 – 2012 வரை சிபிஐயில் பதவியில் இருந்த போது ஷொராபுதீன்-கௌசர் பீ வழக்கில் முக்கிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது . அதன் பின்னர் தாம்கட்கே 2012, ஏப்ரல் மாதம் இந்த வழக்கை விசாரிக்கத் துவங்கினார், மேலும் இந்த வழக்கின் இறுதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார். அப்போது பிராஜாபதி என்கவுன்டர் வழக்கு தனியாக விசாரிக்கப்பட்டு வந்தது. 2012 ஆம் ஆண்டு தாம்கட்கேயும் அவரது குழுவும் புதிய குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது.பின்னர், ஷொராபுதீன், கவுசர் பீ வழக்கும், பிராஜாபதி வழக்கும் “பெரிய சதித்திட்டத்தின்” ஒரே பகுதியாக கருதப்பட்டதால் ஒரே வழக்காக நடத்தப்பட்டது.

தாம்கட்கேயின் விசாரணையில் உதய்பூர் போலீஸ் கண்காணிப்பாளர் எம் என் தினேஷ் , ஒரு போலீஸ் குழுவை உருவாக்கி பிரஜாபதியை 2006, டிசம்பர் 28 ஆம் தேதி கொன்றார் என்று தெரியவந்தது . எம் என் தினேஷ் மற்றும் அவரது போலீஸ் குழு எவ்வாறு பிரஜாபதியை உதய்பூர் சிறையில் இருந்து நீதிமன்றத்துக்கு அழைத்து சென்றதும், பின்னர் அந்த குழுவே பிரஜாபதியை சிறைக்கு அனுப்ப்பி வைத்ததும் பின்னர் நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லும் வழியில் கொல்லப்பட்டதும் பற்றி தாம்கட்கே விலாவாரியாக விவரிக்கிறார்.

இந்த என்கவுன்டரின்போது துணை இன்ஸ்பெக்டர் ஆஷிஷ் பாண்டியா கையில் ஏற்பட்ட காயம் தாங்களாகவே ஏற்படுத்தி கொள்ளலாம் என்று நிபுணர்கள் விசாரணையில் தெரியவந்தது என்று தாம்கட்கே அளித்த தகவல்கள் கூறுகின்றன.

இஸ்ரத் ஜகான் வழக்கு

ஷொராபுதீன், கவுசர் பீ, பிராஜாபதி வழக்கு மட்டுமல்லாமல் இஸ்ரத் ஜகான் வழக்கையும் தாம்கட்கே மேற்பார்வையிட்டு வந்தார். இந்த வழக்கில் சிபிஐ 2 குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்த போதிலும் அப்போது குஜராத்தின் முதல்வராக இருந்த மோடிக்கும், அமித் ஷாவுக்க்கும் மிகவும் நெருக்கமான அதிகாரிகளே இஸ்ரத் ஜகான் வழக்கை விசாரித்து வந்தனர்.

2014 ஆம் ஆண்டு மோடி பிரதமராக பதவியேற்பதற்கு சில வாரங்களுக்கு முன் பல என்கவுன்டர் வழக்குகளை மேற்பார்வையிட்டு வந்த தாம்கட்கே – யை நாகலாந்துக்கு பணிமாற்றம் செய்து உத்தரவிட்டனர்.

2015 ஆம் ஆண்டு தாம்கட்கே மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது .

Courtesy : The Wire

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here