மிக்-21 ரக போர் விமானத்தைத் தனியாக இயக்கி சாதனைப் படைத்துள்ளார் இந்தியாவின் முதல் பெண் விமானியான அவானி சதுர்வேதி.

கடந்த 2016ஆம் ஆண்டு, இந்திய விமானப்படையில் முதல் முறையாக, அவானி சதுர்வேதி, பவானா காந்த் மற்றும் மோகனா சிங் ஆகிய மூன்று பெண் விமானிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரத்யேக பயிற்சிக்குப் பின்னர் பணியமர்த்தப்பட்டனர். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த அவானி சதுர்வேதி, பிடெக் (கம்பியூட்டர் சயின்ஸ்) படித்தவர்.

இந்திய விமானப்படையில் சேர்ந்த அவானி, மற்றொரு விமானியின் துணையுடன் போர் விமானங்களை இயக்குவதில் பயிற்சி மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், குஜராத் மாநிலம் ஜாம்நகர் விமானப்படை தளத்தில், ரஷ்யாவிலிருந்து வாங்கப்பட்ட சூப்பர் சானிக் மிக்– 21 ரக போர் விமானத்தை அவானி சதுர்வேதி தனியாக ஓட்டினார். இதன்மூலம், போர் விமானத்தை தனியாக இயக்கிய முதல் இந்திய பெண் விமானி என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இதனையடுத்து அவருக்கு டுவிட்டரில் பாரட்டுகள் குவிகின்றன.

இதையும் படியுங்கள்: ஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்