போராட்டத்தில் துப்பாக்கி சூடு ; ஈரானுக்கு அமெரிக்கா கண்டனம்

0
191

ஈரானில் அரசுக்கு எதிராக போரட்டம் வெடித்து உள்ளது இதை தொடர்ந்து துப்பாக்கி சூடு நடைபெற்றது.

ஈரான் தலைநகர் தெஹ்ரான் அருகே உக்ரைன் நாட்டு பயணிகள் விமானத்தை ஈரான் ராணுவம் தவறுதலாக சுட்டு வீழ்த்தியதில் 82 ஈரானியர்கள் மற்றும் 63 கனடா நாட்டவர் உள்பட 176 பயணிகள் உயிரிழந்தனர்.

ஈரான் ராணுவ தாக்குதலில் சொந்த நாட்டைச் சேர்ந்த 82 பேர் உயிரிழந்ததை அறிந்த அந்நாட்டு மக்கள்,அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

போராட்டங்களை அடக்க பாதுகாப்புத்துறையினரும்,போலீசாரும் கடுமையாக போராடி வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்தில் பங்கேற்றதற்காக ஈரானுக்கான பிரிட்டன் தூதர் டோம்னிக் ராப் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். 

விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி என்பதாலேயே பங்கேற்றதாகவும் அது போராட்டமாக மாறும் என தனக்குத் தெரியாது என்றும் துாதரக அதிகாரிகளை கைது செய்வது சட்ட விரோதம் என்றும் டிவிட்டரில் கூறியுள்ளார் ராப். இதனிடையே இங்கிலாந்து தூதரகத்தை மூடவேண்டும் எனக்கோரி, போராட்டம் வெடித்தது.

உள்ளூர் பத்திரிக்கையாளர் ஒருவர் சமூகவலை தளத்தில் வெளியிட்ட பதிவில், போராட்ட களத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது உண்மைதான், ஈரானிய மக்களின் உயிருக்கு பெரும் ஆபத்து உள்ளது என தெரிவித்துள்ளார்.

இந்த போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் ஆக்ரோசமாக குவாசிம் சுலைமானியின் போஸ்டர்களை உதைப்பதும், சுவற்றில் ஒட்டியிருந்த அவரின் போஸ்டரை கிழிப்பதும் போன்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

ஈரானில் நடைபெறும் போராட்டங்களை உலக நாடுகள் குறிப்பாக அமெரிக்கா கண்காணித்து வருவதாகவும், போராட்டத்தில் ஈடுபடும் ஈரான் மக்களை அரசு கொல்லக் கூடாது என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டிவிட்டரில் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே போருக்கான முயற்சியை கைவிடுவதே அமெரிக்காவுடனான பதற்றத்தை குறைக்க உதவும் என கத்தார் அதிகாரிகளிடம் ஈரான்அதிபர் ஹசன் ரூஹானி கருத்து கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here