போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் பட்டியலை தாக்கல் செய்த ராகுல் காந்தி

0
307

விவசாயிகளுக்கு உரிமைகள், வேலைவாய்ப்புகள், இழப்பீடுகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மக்களவையில் கோரிக்கை விடுத்தார்.

கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் போராட்டம் நடத்தியதை அடுத்து, மூன்று சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்தது.

எனினும், விவசாயிகளின் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்திய அரசிடம் இருந்து முறையான பதில் கிடைக்கும் வரை விவசாயிகளின் போராட்டம் தொடரும் என்று விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா சனிக்கிழமை தெரிவித்தது. மேலும், விவசாயப் பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்பதும் அவர்களின் முக்கிய கோரிக்கையாக இருக்கிறது.

இந்நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மக்களவையில் இன்று ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்தார்.

தீர்மானத்தின் மீது மக்களவையில் பேசிய ராகுல் காந்தி, ‘வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி, வேளாண் சட்டங்களை ரத்து செய்ததுடன் விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்டார். அவர் தன்னுடைய தவறை ஒப்புக்கொண்டுள்ளார். அவ்வாறெனில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

இதன் மூலம் அவர் தனது தவறை ஒப்புக் கொண்டுவிட்டார். கடந்த மாதம் 30-ஆம் தேதி விவசாயிகள் போராட்டத்தில் எத்தனை பேர் இறந்தனர் என மத்திய வேளாண் துறை அமைச்சரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் தங்களிடம் அதுகுறித்த தரவுகள் (டேட்டாக்கள்) இல்லை என்றார். பஞ்சாபை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட இறந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு ரூ 5 லட்சம் இழப்பீட்டை காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் அரசு வழங்கியுள்ளது.

அது போல் 152 பேரின் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பும் கொடுத்துள்ளது. என்னிடம் அதற்கான பட்டியல் என்னிடம் உள்ளது. ஹரியானாவில் இறந்த 70 விவசாயிகளின் விவரங்கள் அடங்கிய மற்றொரு பட்டியலையும் நாங்கள் வைத்துள்ளோம். ஆனால் மத்திய அரசோ பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பெயர்கள் தங்களிடம் இல்லை என தெரிவிக்கிறது. இந்த பட்டியலை நான் மக்களவையில் தாக்கல் செய்கிறேன் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here