போதாது

எடப்பாடி அரசுக்குப் போதுமான உறுதியில்லை.

0
416
முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி

ஜெயலலிதா முதலமைச்சராக நீடித்திருந்தால் இப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டிருக்கும்; மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு வழங்கியாவது அவர் இதனைச் சாதித்திருப்பார். மக்கள் நல அரசு, மாநில உரிமைகள், மதச்சார்பின்மை ஆகியவற்றில் சமரசமற்ற போக்கை தன் வாழ்வின் கடைசி பத்தாண்டுகளில் உறுதியாக கடைபிடித்தார் ஜெயலலிதா.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு ஜெயலலிதாவின் பாதையிலிருந்து வெகுவாக வழுக்கிச் சென்றுவிட்டது; மத்திய அரசை நிர்பந்தியுங்கள் என்று சொன்னவரைக் கட்சியின் அடிப்படைப் பொறுப்பிலிருந்து நீக்குமளவுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறது. இது தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்கு ஆரோக்கியமானதல்ல.

ஒக்கி சொந்தங்களுடன் கரம் பிடித்து நடப்போம்; இங்கே, இப்போதே உதவுங்கள்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்