போட்டி நிறுவனத்திடம் கைமாறும் ஊபர் ஈட்ஸ்

0
192

இந்தியாவில், தனது ஊபர் ஈட்ஸ் (Uber Eats) ஆன்லைன் உணவு விற்பனை பிரிவை ஸொமேட்டோவுக்கு (Zomato)ரூ.1224 கோடிக்கு விற்க ஊபர் முடிவு செய்துள்ளது.

ஊபர் ஈட்ஸ், சுவிக்கி (Swiggy) மற்றும் ஸொமேட்டோ ஆகிய உணவு விநியோக நிறுவனங்களின் கடும் போட்டியை சந்திக்க முடியாமல் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. இதனால் தாய் நிறுவனமான ஊபர் டாக்சி நிறுவனம் சர்வதேச பங்கு சந்தையில் தனது மதிப்பை இழக்கும் நிலை உருவானது.

இதை தவிர்க்கும் நோக்கில் ஆன்லைன் உணவு விற்பனை பிரிவை விற்க முடிவு செய்யப்பட்டதாக ஊபர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், இந்தியாவில்  நிறுவனம் விற்கப்படுவதால் வேலை இழக்கும் ஊழியர்களுக்கு ஊபர் நிறுவனத்தில் மாற்றுப் பணிகள் வழங்கப்படும் என தலைமை செயல் அதிகாரி தாரா கோஷ்ரோஷாஹி(DaraKhosrowshahi) தெரிவித்துள்ளார். அதேநேரம் டாக்சி சேவைகளில் கூடுதல் முதலீடு மற்றும் கவனம் செலுத்தப்போவதாக கூறியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here