போகி பண்டிகைக் கொண்டாட்டத்தால், சென்னை மாநகர் புகை மண்டலமாக மாறியுள்ளது. இதனால் போக்குவரத்து சேவைகளும் பாதிக்கப்பட்டன.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் முதல் நாளான போகிப் பண்டிகையையொட்டி, வீட்டிலுள்ள தேவையற்ற பழைய பொருட்களை அப்புறப்படுத்தி, வீட்டின் வாசல் முன்பு தீயிட்டு கொளுத்துவது வழக்கம்.

pogi-1

தமிழகம் முழுவதும் போகிப் பண்டிகைக் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் அதிகாலையில் கடும் குளிரிலும் வீட்டிலுள்ள பழைய பொருட்களை வீட்டின் வாசல் முன்பு தீயிட்டு மக்கள் எரித்தனர். சிறுவர்கள் மேளம் அடித்து, பழைய பொருட்களைத் தீயிட்டு கொளுத்தினர்.

pogi-3

சென்னையின் பல்வேறு பகுதிகளில் போகிப் பண்டிகைக் கொண்டாட்டத்தால் மாநகர் புகை மண்டலமாக மாறியது. பனி மூட்டத்துடன் புகை மூட்டம் சேர்ந்து கொண்டதால் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய கத்தார் மற்றும் சார்ஜா செல்ல வேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்