மார்கழி மாதத்தின் இறுதிநாளில் பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் போகிப் பண்டிகை இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. பழைய மற்றும் தேவையற்ற பொருட்களை எரித்து மக்கள் போகியை கொண்டாடுவது வழக்கமாக உள்ளது.

இந்த ஆண்டின் போகிப் பண்டிகை இன்று(திங்கள்கிழமை) வழமைபோல் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. அதிகாலையில் பொதுமக்கள் பழைய பொருட்களை தங்கள் வீடுகளின் முன்பு தீயில் இட்டு எரித்தனர்.

ஆனால், காற்றை மாசுபடுத்தும் வகையில் போகியை கொண்டாடாமல் பெரும்பாலான இடங்களில் சம்பிரதாயத்திற்காக, தேவையற்ற மக்கும் குப்பைகளை மட்டுமே எரித்து போகியை பொது மக்கள் கொண்டாடினர். ஒரு சில இடங்களில் மட்டுமே பெரிய அளவில் நெருப்பு மூட்டி போகியை கொண்டாடினர்.

ஏற்கனவே அதிகாலையில் சென்னையில் நிலவும் பனிமூட்டம் காரணமாக இன்று காலை பனியுடன் புகையும் சேர்ந்து கடும் பனிமூட்டம் மற்றும் புகை மூட்டமாக காணப்பட்டது.

இதனால் பெருநகரங்களில் காலை வேளையில் போக்குவரத்துக்கு இடையூறு பல இடங்களில் ஏற்பட்டது. சென்னையின் பல்வேறு இடங்கள் புகை மண்டலங்களாக காட்சியளித்தன.

இதன் காரணமாக சென்னையில் விமான சேவையும் பாதிக்கப்பட்டு பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். பெங்களுர், புனே, திருச்சி, மும்பை, அந்தமானில் இருந்து வந்து செல்லும் விமானங்கள் 2 மணி நேரம் வரை தாமதம் ஆகியுள்ளன. சென்னை – பெங்களூரு, சென்னை – மும்பை செல்லவிருந்த ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

பிளாஸ்டிக் போன்ற பொருட்களை எரித்து காற்றை மாசுப்படுத்த வேண்டாம் என்று அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. காற்றின் தரத்தினை மாசு கட்டுப்பாட்டு வாரியம் கண்காணித்து ஆய்வு செய்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here