பொள்ளாச்சி பாலியல் கோடூர சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசை, 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

முன்னதாக நீதிமன்றம் முழுவதும் மகளிர் அமைப்பினர் சூழ்ந்ததால், திருநாவுக்கரசை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவது தொடர்பாக சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டது. இந்நிலையில் அவரை வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜர்படுத்த போலீசார் அனுமதி கேட்டனர்.

இதற்கு அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து திருநாவுக்கரசு விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணையை அடுத்து அவரை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும், சபரிராஜன் (25), திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இந்த நிலையில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here