பொள்ளாச்சி பாலியல் கொடூரம் : யூ டியூப்க்கு சிபிசிஐடி மின்னஞ்சல்

0
164


பொள்ளாச்சி விவகாரத்தில் அண்மையில் வெளியான ஆடியோ தொடர்பாக யூ டியூப் நிறுவனத்துக்கு சிபிசிஐடி கடிதம் அனுப்பியுள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் பெண்களை ஆபாச விடியோ எடுத்து அவர்களிடம் அத்துமீறிய வழக்கில் பொள்ளாச்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், புகார் கொடுத்த மாணவியின் சகோதரரைத் தாக்கிய “பார்’ நாகராஜ், பாபு, செந்தில், வசந்த்குமார் ஆகியோர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். 

இவ்விவகாரத்தில் ஒரு பெண்ணின் ஆடியோவுடன் வீடியோ ஒன்று யூடியூப் இணையதளத்தில் அண்மையில் வெளியாகி இருந்தது. அதில் திருநாவுக்கரசு வீட்டின் பின்புறம் ஒரு சிறுமியை கொன்று புதைத்ததாக பெண் பேசுவது போல் ஆடியோ இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் பொள்ளாச்சி விவகாரத்தில் அண்மையில் வெளியான ஆடியோவின் உண்மைத் தன்மையை அறியும் பொருட்டு, அந்த ஆடியோவை பதிவு செய்தவரின் தகவலை பெற இமெயில் வாயிலாக யூ டியூப் நிறுவனத்திற்கு சிபிசிஐடி கடிதம் அனுப்பியுள்ளது. 

இதனிடையே பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பான 90% வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன என்றும் மார்ஃபிங் செய்த ஒரு சில வீடியோக்கள் மட்டுமே இருக்கிறது என்றும் சிபிசிஐடிக்கு யூடியூப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here