பொள்ளாச்சியில் பாலியல் கொடூரம் விவகாரத்தில் ஆபாச வீடியோ எடுத்து பெண்களிடம் அத்துமீறிய கும்பலால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் ஆடியோ ஒன்று பரவி வருகிறது.

பொள்ளாச்சி ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக ஆடியோ ஒன்று கட்செவி அஞ்சல் மூலம் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த ஆடியோவில் பேசும் இளம்பெண் ஒருவர், திருநாவுக்கரசு மற்றும் அவரது கும்பலால் நான் பாதிக்கப்பட்டதாகவும். என்னை அவர்கள் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தியபோது, அங்கு சிறுமி ஒருவர் இருந்தார். அவரைத் திருநாவுக்கரசு மற்றும் அவரது நண்பர்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர்.

இதனால், அச்சிறுமி இறந்துவிட்டார். அந்த சிறுமியை ஒரு வீட்டின் வெளியே புதைத்துவிட்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இப்பிரச்னை குறித்து தற்போது அனைவரும் பேசத் துவங்கியுள்ளதால் இதை வெளியில் கொண்டு வந்துள்ளேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து சிபிசிஐடி அதிகாரிகளிடம் கேட்டபோது, பொள்ளாச்சி வழக்கு தொடர்பாக விசாரணை தொடங்கிய நாளில் இருந்து சமூக வலைதளங்களில் பல்வேறு ஆடியோக்களும், வீடியோக்களும் வெளியாகி வருகின்றன.

இதில் உள்ள உண்மைத் தன்மை குறித்து ஆராய்வது அவசியம். ஆடியோ வெளியிட்டுள்ள பெண் இந்தக் கும்பலால் தானும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.  இதுகுறித்து அவர் புகார் அளித்தால் முறையாகப் பரிசீலித்து நடவடிக்கை எடுப்போம் என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here