பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் புகார் அளித்த பெண்ணின் அண்ணனை தாக்கிய பார் நாகராஜனுக்கு சிபிசிஐடி போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளனர். 

ஆபாச வீடியோ எடுத்து பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்து கடும் தண்டனை வழங்கக்கோரி தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இது தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டதை அடுத்து சிபிசிஐடி போலீஸார் பொள்ளாச்சியில் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் புகார் அளித்த பெண்ணின் அண்ணனை தாக்கிய வழக்கில் 28 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக பார் நாகராஜனுக்கு சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here