பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் வீடியோ வெளியிட்ட வழக்கில், நக்கீரன் கோபாலுக்கு வரும் 25ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது.

இளம்பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து அவர்களிடம் பணம் பறித்து வந்த 4 பேர் கொண்ட கும்பலை பொள்ளாச்சி காவல்துறை கைது செய்தது. இச் சம்பவம் குறித்த வீடியோ பதிவை நக்கீரன் வார இதழ் வெளிட்டது. பொள்ளாச்சி சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்ப்புள்ளதாகவும், சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் நக்கீரன் கோபாலுல் கூறியிருந்தார். மேலும் அதிமுக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் குடும்பத்தினருக்கு இந்த விவகாரத்தில் தொடர்புள்ளது. இந்த கும்பல் சுமார் 7 வருடங்களாக பெண்களை மிரட்டி இதுபோன்ற குற்றச்செயலில் ஈடுபட்டு வந்தது என அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் சம்பவத்துக்கு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டதை அடுத்து பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் பொள்ளாச்சியில் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வீடியோ பதிவை வெளியிட்ட வழக்கில் நக்கீரன் கோபாலுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. அதில், மார்ச் 25 ஆம் தேதி கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என நக்கீரன் ஆசிரியர் கோபால், தேனி கண்ணனுக்கு அனுப்பப்பட்டுள்ள சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சம்மன் அனுப்பி நக்கீரன் கோபால் ஆஜராகாத நிலையில், 2வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here