பொள்ளாச்சி பாலியல் கொடூரம் ; சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

0
182

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் கைதான சபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்த குமார், சதீஷ், மணி ஆகியோர் மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது

தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு உட்பட 5 பேர் மீது சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி சிபிசிஐடி காவல்துறை துறையிடம் இருந்து இந்த வழக்கு மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் கோவை மற்றும் பொள்ளாச்சி பகுதியில் முகாமிட்டு பாதிக்கப்பட்ட பெண், குற்றவாளிகளின் குடும்பத்தார் மற்றும் குற்றவாளிகள் நண்பர்களிடமும் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்

மேலும் மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து செல்போனில் படமெடுத்த வீடாக கூறப்படும் சின்னப்பம்பாளையத்தில் உள்ள திருநாவுக்கரசு பண்ணை வீட்டில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு நடத்தி ஆதாரங்களை சேகரித்தனர்.

இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் கைதான சபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்த குமார், சதீஷ், மணி ஆகியோர் மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. முதலில் இந்த வழக்கை விசாரித்த தமிழக போலீசார் பாலியல் வன்கொடுமை பிரிவில் வழக்கை பதிவுசெய்யாத நிலையில் , 5 பேரும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக குற்றப்பத்திரிகையில் சிபிஐ குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here