பொறியியல் முதுநிலை படிப்புகளுக்கு ஒரே நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்பிஏ, எம்சிஏ உள்ளிட்ட முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு டான்செட் ((TANCET)) நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வரும் நிலையில், அண்ணா பல்கலைகழகத்தில் சேர்வதற்காக தனியாக AUCET  நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.  2 தேர்வுகள் எழுதுவது குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும், இதனை ஒரே தேர்வாக நடத்த வேண்டும் என்றும் தமிழக உயர்கல்வித்துறை அண்ணா பல்கலைகழகத்தை அறிவுறுத்தியது.

இதுகுறித்து அண்ணா பல்கலைகழகத்தின் துணை வேந்தர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முதுநிலை படிப்புகளில் சேர TANCET நுழைவுத் தேர்வு மட்டும் தான் நடத்தப்படும் என்றும் AUCET தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் TANCET தேர்வுக்கு விண்ணப்பிப்பது குறித்து இன்று(வியாழக்கிழமை) மாலை அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here