பி.இ., பிடெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு மாணவர்கள் இன்று முதல் ஆகஸ்ட் 24 ந் தேதி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

பொறியியல் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர விரும்பும் மாணவர்கள் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 24ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.  www.tneaonline.org or www.tndte.gov.in என்ற இணையதளங்களின் மூலம் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

மாணவர்கள் விண்ணப்பிக்க வசதியாக பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரிகளில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி இந்த மையங்கள் செயல்படும்.

மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கான ரேண்டம் எண்களை ஆகஸ்ட் 25ம் தேதி வெளியிட உயர்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 4ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.

சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் கலந்தாய்வு செப்டம்பர் 7 முதல் 11ம் தேதி வரை நடைபெறும். பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 16 வரை நடத்தப்படும்.

அதில், மாணவர்களுக்கான துணைக் கலந்தாய்வு அக்டோபர் 12 முதல் 16 வரை நடைபெற உள்ளது. அக்டோபர் 20ம் தேதிக்குள் அனைத்து கலந்தாய்வுகளும் முடிவுக்கு வரும்.

கொரோனா பரவலால் மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பம், கலந்தாய்வு என அனைத்தையும் ஆன்லைன் முறையில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here