தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வை நடத்துகிறது. கடந்த மாதம் 2ஆம் தேதி முதல் 31ஆம் தேதிவரை நடைபெற்ற விண்ணப்பப் பதிவில் பொறியியல் படிப்பில் சேர ஒரு லட்சத்து 32,412 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில்,இவர்களுக்கான ரேண்டம் எண், அண்மையில் வெளியிடப்பட்டது. கடந்த 7ஆம்  தேதி முதல் 12ஆம் தேதி வரை 45 உதவி மையங்களில் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித் துறை அமைச்சர் இன்று வெளியிட்டார்.

முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்களில் 7 பேர் மாநில பாடத்திட்டத்திலும், 2பேர் CBSE பாடத்திட்டதிலும் ,1 மாணவர் பிற பாடத்திட்டத்திலும் படித்தவர் ஆவார்.

தொழில்நுட்ப கல்வி இயக்குநரத்தின் இணையதளமான
http://tndte.org.in/ மற்றும் பொறியியல் சேர்க்கைக்கான இணையதளமான tneaonline.in ஆகியவற்றில் பதிவு எண்கள் உள்ளிட்ட தகவல்களை கொடுத்து ரேங்க் லிஸ்டை பெற்றுக்கொள்ளலாம்.

பிளஸ் டூ தேர்வில் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் மாணவர்கள் எடுத்துள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

இதையடுத்து, சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 25ஆம் தேதியும், பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 3ஆம் தேதியும் ஆரம்பிக்கவுள்ளன.

பொறியியல் படிப்புக்கான மொத்த இடங்கள் 1 லட்சத்து 72 ஆயிரத்து 940 ஆகும். இந்நிலையில், இந்த ஆண்டு 1 லட்சத்து 27ஆயிரத்து 245 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

காலியாக உள்ள இடங்கள் 69ஆயிரத்து 790ஆகும். மேலும், விண்ணப்பித்தவர்களில் 1லட்சத்து 3 ஆயிரத்து 150 பேர் தகுதியுடைவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆண்டு 479 கல்லூரிகளில் பொறியியல் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. 15 கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதியில்லை

இந்த ஆண்டு 216 மாற்றுத்திறனாளி மாணவர்களும் , 1537 முன்னாள் இராணுவத்தினர் பிள்ளைகள், 4616 விளையாட்டு பிரிவு மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here