பொருளாதார வீழ்ச்சிக்கு மோடி அரசின் தவறானத் திட்டங்கள், செயல்பாடுகள் தான் காரணம்- மன்மோகன் சிங்

0
307

இந்திய பொருளாதாரம் சரிந்து  உள்ளது குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

தற்போது இந்திய பொருளாதாரத்தின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. கடந்த காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக குறைந்தது என்பது இந்திய பொருளாதாரம் நீண்டகாலமாக மந்தநிலையில் உள்ளதை வெளிக்காட்டுகிறது. இந்திய பொருளாதாரம் இதைவிட வேகமாக வளர்க்க கூடிய சூழல் இருந்தும், மோடி அரசின் தவறான கொள்கைகளால் வளர்ச்சி குறைந்துள்ளது. 

மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி  குறைந்துள்ளது. 

உற்பத்தித் துறையின் வளர்ச்சி 0.6% ஆக இருப்பது வருத்தமளிக்கிறது. 500, 1000 ரூ நோட்டுகளைச் செல்லாது என்று அறிவித்த  நடவடிக்கையும், ஜி.எஸ்.டி வரியைச் சரியாக திட்டமிடாமல் அவசரமாக செயல்படுத்தியதுதான் உற்பத்தி துறை வீழ்ச்சியடைந்ததற்கு காரணம்.

மோடி அரசின் தவறான கொள்கைகளால் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. ஆட்டோ மொபைல் துறையில் 3.5 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். தவறான மனித முடிவுகளால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டுமானால் பழிவாங்கும் அரசியலை ஒதுக்கிவைத்து விட்டு பொரு:ளாதாரத்தை மீட்க பொருளாதார சிந்தனையாளர்களுடன் ஆலோசனை நடத்தி விவேகமான முடிவுகளை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here