சிபிஐ காவல் நீட்டிக்கப்படுவது குறித்து ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா என ப.சிதம்பரத்திடம் கேட்டபோது ஜிடிபி 5 சதவீதம் என பதில் அளித்தார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் காவலை நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை என்று சிபிஐ கூறியபோதும், செப்டம்பர் 5-ஆம் தேதி வரை அவரை சிபிஐ காவலில் வைக்க உச்சநீதிமன்றம் கட்டாய உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் சிபிஐ காவல் நீட்டிக்கப்படுவது குறித்து ஏதாவது கூற விரும்புகிறீர்களா என சிதம்பரத்திடம் டெல்லி நீதிமன்றம் வெளிய செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த சிதம்ரபம் ஐந்து விரல்களையும் காண்பித்து 5 சதவீதம் என்றார். என்ன ஐந்து சதவீதம் என்று மறுகேள்வி கேட்டதற்கு ஜிடிபி ஐந்து சதவீதம் என பதில் அளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here