பொருளாதாரத்தையும், கொரோனாவையும் மோடி அரசு கையாண்ட விதம் குறித்து மீண்டும் விமர்சித்த ராகுல் காந்தி

How to completely destroy an economy and infect the maximum number of people really quickly," he said in a tweet, tagging a picture that showed the projected GDP growth rate for 2020 and the number of deaths per million in 11 countries of the region.

0
203

மத்திய அரசு பொருளதாரத்தைக் கையாண்ட விதத்தையும், கொரோனா வைரஸைக் கையாண்ட விதத்தையும் சுட்டிக்காட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் விமர்சித்துள்ளார்.

சமீபத்தில் சர்வதேச நிதியம் வெளியிட்ட அறிவிப்பில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 10.33 சதவீதம் வீழ்ச்சி அடையும் என்று குறிப்பிட்டிருந்தது. அதைக் குறிப்பிட்டும், வங்கதேசத்தைவிட கரோனா வைரஸை இந்தியா மோசமாகக் கையாண்டது என்றும் ராகுல் காந்தி விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் சர்வதேச நிதியம் வெளியிட்ட தகவலையும், கொரோனா பாதிப்பைக் கணக்கிடும் வேர்ல்டோ மீட்டர் கணக்கீட்டையும் ஒப்பிட்டு மத்திய அரசை ராகுல் காந்தி சாடியுள்ளார். இதற்கான வரைபடத்தையும் வெளியிட்டுள்ளார்.

அதில், கொரோனா காலத்தில் வங்கதேசம் அதிகபட்சமாக 3.4 சதவீதப் பொருளாதார வளர்ச்சியைப் பெறும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. கொரோனாவில் லட்சத்துக்கு 34 பேர் வங்க தேசத்தில் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல சீனாவில் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 1.9 சதவீதம் வளர்ச்சி அடையும். லட்சத்துக்கு 3 பேர்தான் கரோனாவில் உயிரிழந்தார்கள். ஆனால், இந்தியாவில் கரோனாவில் லட்சத்துக்கு 83 பேர் உயிரிழக்கிறார்கள். நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் மைனஸ் 10.33 சதவீதம் வீழ்ச்சி அடையும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

இதைக் குறிப்பிட்டு ராகுல் காந்தி ட்விட்டரில், “எப்படிப் பொருளாதாரத்தை வேகமாக முழுமையாக அழிப்பது, எப்படி அதிகமான மக்களை விரைவாக கொரோனா தொற்றுக்கு ஆளாக்குவது” என்று விமர்சித்துள்ளார்.

வியட்நாமில் பொருளாதார வளர்ச்சி 1.6 சதவீதம் வளரும் என்றும், கரோனாவில் லட்சத்துக்கு 0.4 பேர் மட்டுமே உயிரிழந்தார்கள் என்றும் அந்த வரைபடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் பொருளாதார வளர்ச்சி பூஜ்ஜியம் என்றும், லட்சத்துக்கு 25 பேர் உயிரிழந்தார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்டை நாடான பாகிஸ்தானில் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 0.4 சதவீதம் வீழ்ச்சி அடையும் என்றும், லட்சத்துக்கு 30 பேர் கொரோனாவில் உயிரிழந்தார்கள் என்றும் வரைபடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here