பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களை மாவட்டத்துக்கு தலா 100 பேர் வீதம் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இலவச உயர்கல்வியை அரசு சாராதொண்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து வழங்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

மாவட்டம் தோறும் பொருளாதார ரீதியில் பின் தங்கிய மாணவர்களை அடையாளம் காண, குழு அமைக்க அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து, ஆல் தி சில்ரன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், அரசுப்பள்ளிகளில் பயிலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி அளித்து வருகிறது. அதன்படி, வரும் 2019-20 கல்வியாண்டில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களில் மாவட்டத்திற்கு 100 மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு இலவச உயர்கல்வி அளிக்க முடிவு செய்துள்ளது.

இதற்காக, தற்போது ஒவ்வொரு மாவட்டத்திற்கும், அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தலைமையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களை கண்டறியும் பணிக்காக குழு அமைக்கவும், அந்தக்குழுவுடன் இணைந்து ஆல் தி சில்ரன் என்ற தனியார் குழுவும் செயல்படும் என்றும், அதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன் அறிவுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்