சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி பொன். மாணிக்கவேல் மீது சக அதிகாரிகளின் புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்க பரிசீலிக்கப்படும் என டி.ஜி.பி. அலுவலகம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் பதிவு செய்யப்பட்ட சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவை அமைத்து, கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த நவம்பர் 30–ந்தேதி ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் ஓய்வுபெற இருந்த நிலையில், உயர் நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்தது. அதன்படி சி.பி.ஐ.க்கு சிலைகடத்தல் தொடர்பான வழக்குகளை மாற்றும் தமிழக அரசின் அரசாணையை சட்டவிரோதம் என்று கூறி ரத்து செய்ததோடு, ஓய்வுபெறும் பொன் மாணிக்கவேலை ஒரு வருடத்திற்கு சிலை கடத்தல் தொடர்பான வழக்குங்களை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக நியமித்து பணி நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டது.

உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை கோரி இதற்கு தடை கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவரது பணி நீட்டிப்புக்கு தடை விதிக்க முடியாது என உத்தரவு பிறப்பித்தது.

அதே சமயம் சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி பொன். மாணிக்கவேல் மீது அந்த பிரிவில் பணியாற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் உள்பட 12 காவல் அதிகாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் புகாரில் சிலை கடத்தல் வழக்கில் உரிய ஆவணங்கள் மற்றும் சாட்சிகள் இல்லாமல் வழக்கு பதிவு செய்ய போன் மாணிக்கவேல் வற்புறுத்துகிறார் என்று தெரிவித்திருந்தனர்.
எனவே இந்த பிரிவில் இருந்து அவர்கள் பணிமாறுதல் வேண்டும் என்று அவர்கள் தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில் சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி பொன். மாணிக்கவேல் மீது சக அதிகாரிகளின் புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்க பரிசீலிக்கப்படும் என டி.ஜி.பி. அலுவலகம் தெரிவித்துள்ளது.

courtesy: DN

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here