பிரபுதேவா போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படத்துக்கு பொன் மாணிக்கவேல் என்று பெயர் வைத்துள்ளனர்.

லட்சுமி, யங் மங் சங், சார்லி சாப்ளின் 2 படங்களில் நடித்துவரும் பிரபுதேவா அறிமுக இயக்குநர் முகில் செல்லப்பன் இயக்கத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். ஹித்தேஷ் ஜபக் தயாரிக்கும் இந்தப் படத்தின் பெயரை இன்று மாலை அறிவிப்பதாக தெரிவித்திருந்தனர். அதன்படி பெயரை அறிவித்தனர். படத்துக்கு பொன் மாணிக்கவேல் என்று பெயர் வைத்துள்ளனர்.

டி.இமான் இதற்கு இசையமைக்கிறார். படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்